எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள கூகுள் குட்டப்பா... நாளை சிறப்பான சம்பவம் காத்திருக்கு!
சென்னை : கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கூகுள் குட்டப்பா படம்
கே எஸ் ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், மனோபாலா மற்றும் லாஸ்லியா லீட் கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் கூகுள் கூட்டப்பா. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரவிக்குமார் தயாரிப்பு
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆக இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கேஎஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார். படத்தின் இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இருவரும் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டிலும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். மேலும் படத்தின் சக்சசிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ட்ரெயிலரை வெளியிடும் சிம்பு
படத்தின் டீசரும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெயிலர் நாளைய தினம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெயிலரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி அளவில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரெய்லரை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படத்தில் தர்ஷனின் தந்தையாக கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ ஒன்றும் நடித்துள்ளது. இதன் சேட்டைகள் படத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கமல் -தேவயானி நடிப்பில் தெனாலி படத்தை தயாரித்த கேஎஸ் ரவிக்குமார் தற்போது இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











