Jayalalithaa - படையப்பா நீலாம்பரிக்கு ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன்.. டாப் சீக்ரெட்டை சொன்ன இயக்குநர்
சென்னை: Jayalalithaa (ஜெயலலிதா) படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் உருவாக்கியதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது.
மெகா ஹிட் படையப்பா: படையப்பா திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை ரஜினிகாந்த் பல படங்களை மெகா ஹிட்டாக கொடுத்திருக்கிறார். ஆனால் படையப்பா படம் அதையெல்லாம் தாண்டிய ஹிட்டாக அமைந்தது. ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் என படையப்பா திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. இன்றுவரை பலரது மொபைல்களில் படையப்பா படம் டவுன்லோட் லிஸ்ட்டில் இருக்கிறது.

ரஜினி ஐடியா; நிராகரித்த கமல்: படையப்பா படத்தை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினிபடத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார்களாம். ஆனால் இதை கேள்விப்பட்ட கமல் ஹாசன் இரண்டு இடைவேளைகள் விடுவதெல்லாம் ஒத்துவராத விஷயம். எனவே படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடுங்கள் என ஐடியா கூறினார்.
சிவாஜிக்கு ஒருகோடி சம்பளம்: அதேபோல் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிக்கும்வரை அதிகபட்ச சம்பளமாக 20 லட்சம் ரூபாயைத்தான் பெற்றிருக்கிறார். எனவே படையப்பா படத்துக்கும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கும் என நினைத்திருந்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கோடி ரூபாயை சம்பளமாக தர சொன்னது ரஜினிகாந்த் என்பதும், அதுதான் சிவாஜி கணேசன் முதலும் கடைசியுமாக ஒரு கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீலாம்பரி: இப்போது வேண்டுமானால் ராஜமாதா கேரக்டர் மூலம் ரம்யா கிருஷ்ணன் அடையாளப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு முதல் அடையாளம் பெற்றுக்கொடுத்தது என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம். ரஜினி ஸ்க்ரீனில் இருக்கும்போது ஒருவர் தன் மீது ரசிகனின் கவனத்தை திருப்புவது கடினம். ஆனால் அதை ரம்யா கிருஷ்ணன் அசால்ட்டாக செய்தார்.
இன்ஸ்பிரேஷன்: அந்த நீலாம்பரி கேரக்டர் காலங்கடந்து நின்றுகொண்டிருக்கிறது. இன்னும் நிற்கும். அந்த அளவுக்கு ஃபவர்புல்லான கேரக்டர் அது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முத்து படத்தின் ரீ ரிலிஸ் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "படம் வெளியானபோது நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதாதான் என்று எல்லோரும் சொல்வார்கள். நான் அந்த கேரக்டரை எழுதும்போதும் அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அப்படி ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படியெல்லாம் உடல்மொழி இருக்க வேண்டும் என்று ஃபீல் செய்தே எழுதினேன்" என்றார். முத்து படம் டிசம்பர் 8ஆம் தேதி ரீ ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications