திருப்பிக் கேட்காம இருப்பது தான் தப்பு.. பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கிய கே.எஸ். ரவிக்குமார்!
சென்னை: நகுல் நடிப்பில் உருவாகி வரும் வாஸ்கோடகாமா படத்தின் இசை வெளியீட்டு விழா பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. அக்கா தேவயாணி மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் காலில் விழுந்து நடிகர் நகுல் ஆசி வாங்கினார்.
நடிகர் ஜெகன் பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து பேசிய நிலையில், நீ ஏன் இன்னும் உருப்படாமல் இருக்க என்பது இப்போது தான் புரிகிறது என பயில்வான் ரங்கநாதன் ஜெகனை விளாசி எடுத்தார்.

அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கே.எஸ். ரவிக்குமார் தன்னை பேச அழைத்ததும் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியதை பார்த்து ஜெகனே ஓடி வந்து கே.எஸ். ரவிக்குமார் கைகளை பற்றிக் கொண்டு நன்றி சொன்னார்.
பதறிய பயில்வான் ரங்கநாதன்: சினிமாவில் பலரை பதற வைத்துக் கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதனையே இன்று நடைபெற்ற வாஸ்கோடகாமா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம் பதற வைத்துள்ளது. பயில்வான் ரங்கநாதனையும் அவரது யூடியூப் சேனல் பேச்சுக்களையும் குறி வைத்து பேசினால் இந்த ஆடியோ லாஞ்சை டிரெண்ட் செய்து விடலாம் என நினைத்தே ஜெகன் அப்படி பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பயில்வான் பற்றி பயப்படாமல் பேசியதற்கு ஜெகனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கே.எஸ். ரவிக்குமார் விளாசல்: நடிகர் ஜெகனையும் சினிமா கலைஞர்களையும் மிரட்டும் தொனியில் யூடியூபில் நாங்கள் என்ன பேசினாலும், நீங்க சண்டைக்கு வரக்கூடாது, விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என பேசிய பயில்வான் ரங்கநாதனை பம்ம வைக்கும் அளவுக்கு கே.எஸ். ரவிக்குமார் அவரது ஸ்டைலில் விளாசி எடுத்து விட்டார்.
திருப்பிக் கேட்கணும்: "என்னை வாழவைக்கும் யூடியூப் நேயர்களுக்கு வணக்கம்" அதை மட்டும் தான் நீங்க இன்னைக்கு சொல்லல என கே.எஸ். ரவிக்குமார் பயில்வான் பக்கம் திரும்பிக் கேட்டதும், அவன் என்னை எதிர்த்து பேசிட்டான் என ஜெகனை குற்றம்சாட்டினார் பயில்வான் ரங்கநாதன். அவர் உங்களை எதிர்த்து பேசல, நீங்கள் தான் அவரை எச்சரித்து பேசினீர்கள். எந்தவொரு விஷயத்தையும் எதிர்த்துக் கேட்கணும், எதிர்த்து கேட்காமல் விடுவதால் தான் இஷ்டத்துக்கு பேசுறாங்க என பயில்வான் ரங்கநாதனை கே.எஸ். ரவிக்குமார் பஞ்சர் ஆக்கியதும், தனக்காக இதை பதிவு செய்ததற்கு நன்றி என ஓடி வந்து கே.எஸ். ரவிக்குமாரின் கைகளை பற்றி ஜெகன் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து விழும் அடி: சினிமா விழாக்களில் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுக்கு அடி விழுந்து வருவதாக அந்த வீடியோவுக்கு கீழ் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சமீபத்தில் ரத்னம் பட நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து பேசியதும் அவர் நிகழ்ச்சியை விட்டே வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











