நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா?
சென்னை: நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது யார் என்ற செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம்.

பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சியை வைத்து தான் இத்தனை மீம்ஸுகளும். ட்விட்டரில் வேறு மீம்கள் போட்டுத் தாக்குகிறார்கள்.
இந்நிலையில் நாட்டாமை படத்தில் வந்த அந்த மிக்சர் காட்சியில் நடித்தவர் யார் என்பதை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பெண் பார்க்கும் காட்சியில் எதுவுமே கூறாமல் தன்பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டவர் லைட்மேனாம்.

படப்பிடிப்பிலும் எதுவும் பேசாமல் வேலை பார்ப்பாராம். ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் தான் அவரை மிக்சர் காட்சியில் நடிக்க பரிந்துரை செய்தார்களாம்.
முதலில் நடிக்கத் தயங்கியவர் எதுவும் பேசத் தேவையில்லை மிக்சர் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று கூறியதும் சந்தோஷமாக நடித்தாராம்.


Click it and Unblock the Notifications