புல்லட் ரயிலை தூக்கி புல்டாஸ்ல உதைச்சு பறக்க விடோணும்... சிங்கிள் திரியில் டபுள் அணுகுண்டு!
சென்னை: ஒரே சென்டிமெண்ட், ஓவர் சென்டிமெண்ட் என கன்னாபின்னாவென கண் கலங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சென்டிமெண்டோடு செம்ம மசாலாவையும் சேர்த்துப் போட்டு மசத்தனமான மட்டன் பிரியாணி படங்களை பரிமாறிய பெருமைக்குப் பாத்திரப்பட்டவர் நம்ம இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதற்கு ஆயிரத்தெட்டு உதாரணங்களை சொல்லலாம்.
சூப்பர் ஸ்டாரின் ஃபேவரைட் இயக்குநர்களில் நம்ம ரவிக்கும் முக்கிய இடமுண்டு. படையப்பா, முத்து என தலைவரை வைத்து தர லோக்கல் ஹிட்டுக்களை கொடுத்தவரல்லவா.
அதனால்தான் இப்பவும் மீண்டும் ரவியோடு ஒரு படம் செய்தே ஆக வேண்டுமெனும் வெறியில் இருகிறார் சூப்பர் ஸ்டார். அது கூடிய விரைவில் அரங்கேறும் போல.

இயக்கம் + நடிப்பு
இந்நிலையில், இயக்குநர் வாய்ப்பு இல்லாததால் நடிப்பு பக்கம் சாய்ந்திருந்தார் ரவிக்குமார். இதோ இப்ப ரிலீஸான கோமாளி படம் வரையிலும் கூட கேமெராவுக்கு முன்னாடி நின்று பட்டாஸ் கிளப்பினார்.

முடியலை
ஆனாலும் பாருங்க, ஓயாமல் ஒழியாமல் ‘ஆக்ஷன்! கட்!' சொன்ன அவரது வாயால் சும்மா இருக்க முடியவில்லை. எனவே மீண்டும் கேமெராவுக்கு பின்னாடி செல்கிறார். ஆமாங்க மீண்டும் இயக்கப்போகிறார். நடிப்புக்கு குட்டி பிரேக் விட்டு விட்டு.

தமிழ் வேண்டாம்டா
தமிழ்ப்படமல்ல, டோலிவுட் செல்கிறார் ரவிக்குமார். அக்கட தேசத்தின் மசாலா மன்னரான பாலகிருஷ்ணாவை வைத்து படமெடுக்கிறார். அதிலும் பாலா இதில் டபுள் ஆக்ஷன் வேறு. வேதிகா, சோனல் சவுகான் என டபுள் ஹீரோயின்கள் வேறு. போதாக்குறைக்கு பூமிகாவும் இருக்கிறாராம்.

புல்லட்டை பறக்க விடுங்க பாஸு
ச்சும்மாவே பாலகிருஷ்ணாவின் படத்தில் ரயிலு பறக்கும், ஃபிளைட்டு நீந்தும். இதுல கே.எஸ்.ரவிக்குமார் வேறு சேர்கிறார். டோலிவுட்டின் திரையரங்குகள் இந்தப் படம் ரிலீஸாகும்போது கிழி கிழிதான்.. வெயிட்டா வெயிட் பண்றோாம்.. இந்த வாட்டி புல்லட் ரயிலை எடுத்து புல்டாஸ்ல அடிச்சுத் தூக்கி பறக்க விடோணும்.. ஓகேவா!
தேவுடா.. !!
- ஜி.தாமிரா


Click it and Unblock the Notifications











