கே எஸ் ரவிக்குமார் எனக்காக வெயிட் பண்ணி அந்த படத்தை எடுத்தார்... எந்த படம் ?

சென்னை: நடிகர் சரத்குமார் குடும்பங்கள் கொண்டாடும் பல வெள்ளிவிழா படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்

வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கி உள்ள சரத்குமார் இரை என்ற வித்தியாசமான வெப் சீரிஸில் நடித்துள்ளார்

இந்தநிலையில் நாட்டாமை படத்திற்காக கேஎஸ் ரவிக்குமார் எனக்காக வெயிட் பண்ணி அந்த படத்தை எடுத்தார் என சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

வெப்சீரிஸ்களிலும்

வெப்சீரிஸ்களிலும்

தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த நடிகர் சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் வேற்று மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கும் அதே சமயம் குணச்சித்திர

வேடங்களிலும் சரத்குமார் நடித்து வருகிறார். இதுவரை திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடிக்க நடிக்கத் தொடங்கியுள்ளார் .

பெரிய பழுவேட்டையார்

பெரிய பழுவேட்டையார்

சமீபத்தில் வெளியான இரை வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. காதல் படங்களை இயக்கி வந்த மணிரத்னம் இப்பொழுது தனது கனவு திரைப்படமான

பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டையார் வேடத்தில் நடித்து வருகிறார் பொன்னியின் செல்வன் படிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் தற்போது
நடைபெற்றுக் கொண்டுள்ளது.

நாட்டாமை

நாட்டாமை

சரத்குமாரின் திரை வாழ்க்கையின் மிக முக்கியமான திரைப்படம் நாட்டாமை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப்

படம் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூலில் முன்னிலையில் இருந்தது அது வரை இருந்த அனைத்து வசூல் சாதனைகளை அடித்து
துவம்சம் செய்த நாட்டாமை இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. அண்ணன் மற்றும் தம்பி என இரண்டு வேடங்களில் சரத்குமார் இதில் கலக்கியிருப்பார்

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

இந்த நிலையில் நாட்டாமை படத்தில் நடிப்பதற்கு முன்பு நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை சரத்குமார் தற்போது பகிர்ந்துள்ளார். அதாவது கே எஸ் ரவிக்குமாரின் முதல் திரைப்படமான

புரியாத புதிரிலிருந்து சரத்குமாரை நடிக்க வைக்க கேட்டுக் கொண்டிருந்தார். நாட்டாமை படத்திற்காக சென்றபோது சரத்குமார் ஒரு சிறு விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சையில் பேசமுடியாத நிலையில் இருந்த சரத்குமாரை சந்தித்துள்ளார். வெறும் செய்கைகளும் எழுத்துக்களாலும் பேச முடிந்த சரத்குமார் நீங்களும் முன் பணத்தை வாங்க வந்துள்ளீர்களா
என கேட்டுள்ளார்.

உங்களுக்காக வெயிட் பண்றேன்

உங்களுக்காக வெயிட் பண்றேன்

அதற்கு கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை படத்தை எடுத்தால் அதில் உங்களை ஹீரோவாக வைத்து மட்டுமே எடுப்பேன் எனக் கூறியுள்ளார். அதற்கு சரத்குமார் அதற்கு இன்னும் ஆறு மாதங்கள்

ஆகும் பரவாயில்லையா என கூறியும் உங்களுக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வெயிட் பண்ணி இந்த படத்தை எடுப்பேன் என கேஎஸ் ரவிக்குமார் கூறியதை கேட்டு இன்றும் என்
கண்கள் கலங்குகிறது. என நாட்டாமை படத்தில் நடந்த சுவாரசியமான தகவலை சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X