Hit list: Time to start the game.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஹிட் லிஸ்ட் பட மிரட்டல் ட்ரெயிலர்!
சென்னை: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டிவரும் கே எஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ஹிட் லிஸ்ட். இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவருடன் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர், நடிகர் என மாஸ் காட்டிவரும் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் மூன்றாவது படமாக உருவாகியுள்ளது ஹிட் லிஸ்ட். சைக்கே திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்: இயக்குனர். நடிகர். தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வரும் கேஎஸ் ரவிக்குமார் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களை ஹீரோவாக வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் அவர் களமிறங்கி, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிப்பில் தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா என இரு படங்களை தயாரித்துள்ள கேஎஸ் ரவிக்குமார் தற்போது தன்னுடைய ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஹிட் லிஸ்ட் படத்தை தயாரித்துள்ளார்.
ஹீரோவாக நடிக்கும் விக்ரமன் மகன்: பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ள விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். மேலும் சைக்கோ திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலான வகையில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரகனி, சித்தாரா, கேஎஸ் ரவிக்குமார், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மிரட்டலான ஹிட் லிஸ்ட் பட ட்ரெயிலர்: இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்றைய தினம் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சைக்கோ கொலைகாரன் இந்தப் படத்தில் சிறப்பாக காட்டப்படுகிறார். அவரிடமிருந்து தன்னுடைய குடும்பத்தை ஹீரோ எப்படி காக்கிறார் என்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. படத்தில் விஜய் கனிஷ்கா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது இந்த ட்ரெயிலர் மூலம் தெரிய வந்துள்ளது முதல் படம் என்ற பதற்றம் அவரது முகத்தில் தெரியாத அளவிற்கு அவரை இயக்குநர்கள் வேலை வாங்கியுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது,
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்ரெயிலர்: இந்தப் படத்தின் டீசரை முன்னதாக விஜய் சேதுபதி வெளியிட்ட சூழலில் தற்போது ட்ரெயிலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோர் பாராட்டிய வீடியோவை கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்டிருந்த சூழலில் தற்போது படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராட்சசன், போர் தொழில் படங்கள் இந்த பாணியில் வெளியான சூழலில் இந்தப் படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











