twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனத்துறை நிலத்தை ஸ்வாகா செய்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் சேர்ந்து வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தைஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அடிப்படையிலேயே பெரும் பணக்காரர் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதான். நகைக் கடைக்காரர்களுக்கே பண உதவிகள் செய்யும் அளவுக்கு பலம் பெற்றவர்.இப்போது சென்னை புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டிவருகிறார் ரவிக்குமார். இங்கு படப்பிடிப்புகளை நடத்த அவர் வாடகைக்கு விட்டும் வருகிறார்.இந் நிலையில் ரவிக்குமார் கட்டி வரும் கட்டடம் அமைந்துள்ள நிலம் வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்தநிலம் தாம்பரம் வனத்துறைக்குச் சொந்தமானது. கடந்த 1890 மற்றும் 1897 ஆகிய ஆண்டுகளில் காப்பு காடு என்ற திட்டத்தின் கீழ்வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலமாம் இது.இந்த நிலத்தை கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்துஅவர்களுக்கு வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.நிலத்தை சட்டப்பூர்வமாக கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    By Staff
    |

    இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் சேர்ந்து வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தைஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அடிப்படையிலேயே பெரும் பணக்காரர் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதான். நகைக் கடைக்காரர்களுக்கே பண உதவிகள் செய்யும் அளவுக்கு பலம் பெற்றவர்.

    இப்போது சென்னை புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டிவருகிறார் ரவிக்குமார். இங்கு படப்பிடிப்புகளை நடத்த அவர் வாடகைக்கு விட்டும் வருகிறார்.

    இந் நிலையில் ரவிக்குமார் கட்டி வரும் கட்டடம் அமைந்துள்ள நிலம் வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்தநிலம் தாம்பரம் வனத்துறைக்குச் சொந்தமானது. கடந்த 1890 மற்றும் 1897 ஆகிய ஆண்டுகளில் காப்பு காடு என்ற திட்டத்தின் கீழ்வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலமாம் இது.

    இந்த நிலத்தை கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்துஅவர்களுக்கு வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    நிலத்தை சட்டப்பூர்வமாக கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

      Read more about: ks ravikimar vs forest dept
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X