Kubera Dhanush: எனக்கு இந்தி தெரியாது.. மும்பை பிரஸ்மீட்டில் தெறிக்கவிட்ட தனுஷ்.. தரமான வீடியோ!

மும்பை: தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷ் தனக்கு இந்தி தெரியாது எனவும், தமிழும் ஆங்கிலமும் நன்கு பேசவரும் என்று தக் லைஃப் ரிப்ளை கொடுத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள குபேரா படம் அவரது நடிப்பில் வெளியாகவுள்ள 51 வது படம். இது மட்டும் இல்லாமல் 52 வது படமான இட்லி கடை படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதிகள் காரணமாக படத்தை வரும் அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது இல்லாமல் தமிழ், இந்தி என தனுஷ் செம பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் ஒரு படம், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு என இவரது லைன் -அப்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படியான நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள குபேரா படத்தின் புரோமோசன் வேலைகளிலும் தனுஷ் கலந்து கொண்டு வருகிறார். அதில்தான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

Kubera Actor Dhanush Bold Speech About Hindi and Spoke Tamil AT Mumbai Press Meet
Photo Credit:

தமிழில் பேசிய தனுஷ்: அதாவது, மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து தனுஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக அந்த கேள்வி ஹிந்தியில் கேட்கப்பட்டது. தன்னை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விக்கு தனுஷ் பதில் அளித்தபோது, " எல்லாருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம் எனக்காக இங்கு வந்துள்ளீர்கள், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று தமிழில் பேசினார். அப்போது அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டினர். அதன் பின்னர் ஆங்கிலத்தில் எனக்கு இந்தி தெரியாது. தமிழ் நன்றாகத் தெரியும், ஆங்கிலம் கொஞ்சம் தெரியும், அதை வைத்துதான் எல்லாவற்றையும் சமாளித்து வருகிறேன்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வரும் ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகிறார்கள்.

Kubera Actor Dhanush Bold Speech About Hindi and Spoke Tamil AT Mumbai Press Meet
Photo Credit:

இந்தி தெரியாது போடா: அதே நிகழ்ச்சியில், ஒருவர் தனுஷ்க்கு இந்தி மொழியில் ஒரு வார்த்தை சொல்லிக் கொடுக்க, அதையும் தனுஷ் திருப்பிச் சொன்னார். தனுஷ் இந்தியில் அந்த வார்த்தையைக் கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டினர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனுஷ் தனக்கு இந்தி தெரியாது என்று கூறியது தொடர்பான வீடியோவை இணையவாசிகள் இணையத்தில் பகிர்ந்து இந்தி தெரியாது போடா என கேப்ஷன் இட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X