Kubera Box Office Day 4: கூரையை பிய்த்துக் கொண்டு கோடி கோடியா கொட்டுது.. குபேரா 4வது நாள் வசூல்!

சென்னை: நடிகர் தனுஷ் நம்பியதற்கு இயக்குநர் சேகர் கம்முலா அவருக்கு பிளாக்பஸ்டர் படத்தையே கொடுத்திருக்கிறார். திங்கட்கிழமை பொதுவாகவே பல படங்களின் வசூல் அப்படியே குறைந்துவிடும். ஆனால், தனுஷின் குபேரா திரைப்படம் இன்னமும் பல கோடி ரூபாயை திங்கட்கிழமை அன்றும் வசூல் செய்திருப்பது தியேட்டர் ஓனர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் குபேரா படக்குழுவுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை அளித்துள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி குபேரா திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டை விட இந்த படத்துக்கு டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருவது தான் படத்தின் வசூல் வேட்டைக்கு முக்கிய காரணம் என்கின்றனர். மேலும், இந்தியிலும் 11 சதவீதம் வரை படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து வருவதும் பெரிதளவில் கைகொடுத்துள்ளது.

Kuberaa Box Office Day 4 Collection reports seems a little drop but it collects nearly 6 Crores
Photo Credit:

திங்கட்கிழமையான நேற்று தெலுங்கில் மட்டும் 34.56 சதவீதம் ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று குபேரா படத்தை பார்த்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 நாட்களில் குபேரா படம் எவ்வளவு கலெக்ட் செய்துள்ளது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

மற்ற மொழிகளிலும் வெற்றி: நடிகர் தனுஷ் நடிப்பின் அசுரனாக விளங்கி வரும் நிலையில், இந்தியில் அவர் நடித்த ராஞ்சனா திரைப்படம் அங்கேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் அம்பிகாபதி என டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான குபேரா படமும் தனுஷுக்கு வெற்றியை பரிசளித்துள்ளது. வாத்தி படத்தின் இயக்குநருடன் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமையும் 6 கோடி வசூல்: ஞாயிற்றுக்கிழமை இந்தியளவில் அதிகபட்சமாக 17 கோடி ரூபாய் அளவுக்கு குபேரா படத்தின் வசூல் இருந்தது. திங்கட்கிழமையான நேற்று குபேரா படத்தை தொடர்ந்து ரசிகர்கள் சப்போர்ட் செய்து பார்த்து வரும் நிலையில், 6.50 கோடி (இதுவரை கிடைத்த தகவலின்படி) ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதர்வாவின் டிஎன்ஏ வசூல்: ஞாயிற்றுக்கிழமை வரை 2.57 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் திங்கட்கிழமை வெறும் 35 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை அந்த படம் 2.95 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், தனுஷின் குபேரா படம் தொடர்ந்து ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்து வருகிறது. 2வது வாரத்திலும் படம் ஓடினால், 100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன் வசூலை முந்துமா?: தனுஷின் குபேரா திரைப்படம் எளிதில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூலை ஒட்டுமொத்தமாக முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலை முந்தவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படங்களின் வசூலை முந்த வாய்ப்பே இல்லை எனக் கூறுகின்றனர். தனுஷின் இட்லி கடை படமாவது இதைவிட அதிக வசூலை அள்ளும் படமாக அமையவேண்டும் என்பதே தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X