Kuberaa First Review: குபேரா முதல் விமர்சனம்.. தனுஷுக்கு வசூல் மழையை கொட்ட வைப்பாரா இந்த குபேரா?

சென்னை: புதிய படங்கள் வெளியாவதற்கு முன்பாக சென்சார் போர்டில் படத்தை பார்த்துவிட்டேன் என பிரபல இந்தி விமர்சகர் உமைர் சந்து ஒவ்வொரு படத்துக்கும் முதல் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்துக்கும் இவர் முதல் விமர்சனம் கொடுத்திருந்தார்.

நம்ம ஊர் பயில்வான் ரங்கன் போல நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும், பாலிவுட்டில் யாருமே ஒழுக்கம் கிடையாது என்றும் ஏகப்பட்ட மோசமான ட்வீட்களை பதிவிட்டே பிரபலமானவர் தான் உமைர் சந்து. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியாகும் தனுஷின் குபேரா படத்துக்கும் தற்போது இவர் ஓடோடி வந்து தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

Kuberaa First Review Nagarjuna and Dhanush performances are top notch told by Umair Sandhu
Photo Credit:

தக் லைஃப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை இவர் சொல்லும் போதே, படத்தை பார்க்காமல் தான் சொல்லியிருப்பார் என பலரும் கிண்டலடித்து வந்த நிலையில், தனுஷ் படத்துக்கு என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார் என இங்கே பார்க்கலாம் வாங்க..

தனுஷின் குபேரா: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உருவாகி வந்த தனுஷின் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது. பாலிவுட்டில் அமீர்கானின் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படமும் தமிழில் அதர்வாவின் டிஎன்ஏ மற்றும் வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட படங்களும் குபேரா படத்துக்குப் போட்டியாக வெளியாகின்றன. பிவிஆர் உள்ளிட்ட தியேட்டர்களில் இன்று டிக்கெட் புக்கிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா/தெலங்கானாவில் டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள நிலையில், பான் இந்தியா அளவிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kuberaa First Review Nagarjuna and Dhanush performances are top notch told by Umair Sandhu
Photo Credit:

முதல் விமர்சனம்: சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படம் பவர்ஃபுல்லான கிரைம் த்ரில்லர் படம் என்றும் நாகார்ஜுனா, தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் டாப் நாட்ச் நடிப்பு ரசிகர்களை மிரளவிடும் என தனது முதல் விமர்சனத்தை குபேரா படத்துக்கு உமைர் சந்து கொடுத்துள்ளார். படத்தின் கதை மொத்தமும் என்கேஜ் ஆகவும், கிளைமேக்ஸ் தான் USP என்றும் 5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்திருக்கிறார் உமைர் சந்து.

அமீர்கான் கத்துக்கணும்: பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் திரைப்படமும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தனுஷிடம் இருந்து வித்தியாசமாக நடிப்பது எப்படி என அமீர்கான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உமைர் சந்து கமெண்ட் அடித்து அமீர்கான் ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளார். மாற்றுத்திறனாளிகளின் ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக சித்தாரே ஜமீன் பர் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்துக்கு சொன்ன விமர்சனம்: பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்துக்கு முன்னதாக கல்ட் கேங்ஸ்டர் படம் என்றும் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் மோதல் காட்சிகள் எல்லாம் மிரட்டிவிடும் என்றும் படம் தாறுமாறு என்றும் விமர்சித்திருந்தார். ஆனால், படம் வெளியானதும் ரசிகர்கள் இவரை ட்விட்டரில் போட்டு பொளந்து விட்டனர். ஆனால், இந்தமுறை உமைர் சந்து சொல்வது போல குபேரா படம் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X