Kuberaa Dhanush: ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது.. பஞ்ச் பேசிய தனுஷின் சினிமா சாம்ராஜ்யம்!
சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமா - தென்னிந்திய சினிமா - பாலிவுட் சினிமா - ஹாலிவுட் சினிமா என அனைத்திலும் முத்திரை பதித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள குபேரா படத்தின் ரிலீஸ் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் 'Sekar 𝕏' என்ற பெயரில் உள்ள இணையவாசி தனுஷின் சினிமா கெரியரின் முக்கியமான விஷயங்களை தனது எக்ஸ் பக்கத்தில் தொகுப்பாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " தனுஷ் இன் தந்தையான கஸ்தூரி ராஜா தனது இளைய மகன் தனுஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் "துள்ளுவதோ இளமை". முதல் படம் Coming Age ஜானரில் வந்ததால் மற்றும் அவரது தோற்றத்திற்காக பல விமர்சனங்களை சந்தித்தார் தனுஷ். இருந்தாலும் படம் ஒரளவு வெற்றி படமாக அமைந்தது. இரண்டாவது படம் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் "காதல் கொண்டேன்". இதில் தனுஷ் இன் நடிப்பு பேசப்பட்டது. படமும் வெற்றி படமாக அமைந்தது. இரண்டு படங்களுக்கும் பக்கபலமாக அமைந்தது யுவனின் இசை
தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தனுஷ்.. ஒரு படம் வெற்றி அடுத்த படம் தோல்வி என ஓடிக்கொண்டிருந்தார். குறிப்பாக திருடா திருடி (2003) மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.. ஆனால் அடுத்தடுத்து வந்த படங்கள் சறுக்கியது... தேவதையை கண்டேன் (2005) மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் (2006) போன்ற படங்கள் வெற்றி படமாக அமைந்தது. 2007 ஆண்டு அறிமுக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் "பொல்லாதவன்".. இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தனுஷ் இன் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது இந்த படம்.

வெற்றி மேல் வெற்றி : பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி (2008) , படிக்காதவன் (2009) , குட்டி (2010) , உத்தமபுத்திரன் (2010) , ஆடுகளம் (2011) , மாப்பிள்ளை (2011) , வேங்கை (2011) மற்றும் மயக்கம் என்ன (2011) என அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன. Extended Cameo ரோலில் நடித்த சீடன் மட்டும் தோல்வி படமாக அமைந்தது. 2012 ஆண்டு தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் "3". இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக போகவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனிரூத் இசையில் தனுஷ் பாடிய பாடல்"ஒய் திஸ் கொலவெறி" உலகம் முழுக்க டிரெண்ட் ஆனது .
பாலிவுட் என்ட்ரி : ஒய் திஸ் கொலவெறி ட்ரெண்ட் ஐ தொடர்ந்து தனுஷ்க்கு 2013 ஆண்டு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் "ராஞ்சனா" .தமிழில் அம்பிகாபதி எனவும் வெளியானது.. படமும் வெற்றி படமாக அமைந்தது. 25வது படம் 2013 ஆண்டு தமிழில் நடித்த நய்யாண்டி மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மரியான் படங்கள் தோல்வி படமாக அமைந்தது. அதே ஆண்டு தனுஷ் இன் 25வது படமாக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய படம் "வேலையில்லா பட்டதாரி". மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தனது 50வது படமான ராயன் படத்தை அவரே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் இருந்தார். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
தயாரிப்பாளர் அவதாரம்: நடிகராக தொடர் வெற்றிகளை தந்த தனுஷ் 2012 இல் "3" படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை , காக்கா முட்டை, நானும் ரௌடிதான் என பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. குறிப்பாக விசாரணை படம் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்று தந்தது.

ஹாலிவுட் & டோலிவுட்: 2022 அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் "Russo Brother's" இயக்கிய "The Gray Man" படத்தின் மூலம் ஹாலிவுட் இல் அடியெடுத்து வைத்தார் தனுஷ். அதற்கு முன்பே 2018 ஆண்டு " The Extraordinary Journey Of the Fakir" என்னும் ஆங்கில படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் தனுஷ். 2023 ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த தெலுங்கு படம் "சார்". தமிழில் வாத்தி என வெளியானது... முதல் தெலுங்கு படமே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. நடிகராக குபேரா மற்றும் இயக்குநராக இட்லி கடை என அடுத்தடுத்து வெற்றியை நோக்கி செல்லும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











