Kuberaa Social Media Review: திருப்பதி வாசலில் பிச்சை எடுத்தது வீண் போகல.. குபேராவுக்கு ஏகபோக வரவேற்பு
சென்னை: நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அமிகோஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை தமிழ்நாடு அல்லாது வெளி மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகளில் பார்த்த ரசிகர்களும் அமெரிக்காவில் பிரீமியர் ஷோ பார்த்த ரசிகர்களும் படம் குறித்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், " குபேரா வழக்கமாக வெளிவரக்கூடிய கதாநாயகத்துவ படமாக இந்த படம் இல்லை. சேகர் கம்முலா தனது வழக்கமான படமாக்கலில் இருந்து விலகி படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது. அதிகாரம் வலி, மக்கள் படும் பாடு ஆகியவற்றை சிறப்பாக படமாக்கியுள்ளார். தனுஷ் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாகர்ஜுனா மீண்டும் ஒரு முறை தான் ஏன் சிறப்பான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. பிரம்மாண்டமான தயாரிப்பில் படம் சிறப்பாக உள்ளது. படத்திற்கு 5 க்கு 4 மார்க் போடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், " முதல் பாதி படம் முழுவதும் நாகர்ஜுனா சம்பவத்திற்கு மேல் சம்பவம் செய்கிறார். இரண்டாம் பாதியில் சேகர் கம்முலா தனது திரைக்கதை மூலமும் படமாக்கல் மூலமும் ஸ்கோர் செய்து குவிக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் மொத்த படத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் எமோஷனலாக உள்ளது. மொத்த தியேட்டரையும் அழ வைத்துவிட்டார் தனுஷ்" என பதிவிட்டுள்ளார்.

மொத்த படத்தையும்: இன்னொரு இணைய வாசி, " தனுஷின் இண்ட்ரோ காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. வேறு ஏதாவது ஒரு நடிகராக இருந்தால் தனது இண்ட்ரோ காட்சியை இப்படி வடிவமைக்க விடுவாரா என்பது கேள்விக்குறி. மொத்த படத்தையும் தனது நடிப்பால் தனுஷ் தூக்கி நிறுத்துகிறார். குபேரா மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும்" என பதிவிட்டுள்ளார்.
தனுஷக்கு தேசிய விருது: மற்றொரு ட்விட்டர் வாசி தனது ட்விட்டர் பக்கத்தில், " தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என அனைவரும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆனால் மொத்த படத்திலும் கதாநாயகன் என்றால் அது இயக்குநர் சேகர் கம்முலா தான். அவரது அசாத்திய இயக்கம் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் அளவுக்கு உள்ளது. தனுஷ் தேசிய விருது வெல்லும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படம் பல பிரிவுகளில் விருதுகளை குவிக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
திருப்பதி வாசலில்: அழுத்தமான கதை, அதற்கேற்ற திரைக்கதை, அட்டகாசமான நடிப்பு, மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கான எமோஷன்ஸ், இவை அனைத்தையும் மிகக் கச்சிதமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்" என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் படத்தை தாருமாறாக கொண்டாடி வருவதால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. படம் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றுவருவதால், தனுஷ் திருப்பதி வாசலில் பிச்சை எடுப்பதைப் போல நடித்தது எல்லாம் வீண் போகவில்லை என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











