Kuberaa Telugu Fans Review: நாகர்ஜுனாவுக்கும் ஒரு படி மேல தனுஷ்.. குபேரா தெலுங்கு ரசிகர்கள் ரிவ்யூவ்

ஹைதராபாத்: தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி வெளியாகியுள்ள படம் குபேரா. படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து தெலுங்கு ரசிகர்களின் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஒரு ரசிகர் கூறுகையில், " படத்தின் கதை முற்றிலும் புதிதாக உள்ளது. சேகர் கம்முலா மீண்டும் பிரமாதப்படுத்தி விட்டார். தனுஷ் மற்றும் நாகர்ஜுனா கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். ராஷ்மிகாவின் எமோஷனலான கதாபாத்திரம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.

Kuberaa Movie Telugu Fans Review Dhanush Nagarjuna Rashmika Mandanna Performed Well
Photo Credit:

தனுஷ்க்கு விருதுகள் உறுதி: அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " படத்தில் தனுஷின் கெட்டப் சூப்பராக உள்ளது. படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக வேகமாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படம் மிகவும் ஸ்லோவாக நகர்கிறது. தனுஷ் நடிப்புக்கு அவருக்கு பல விருதுகள் இந்த படத்தின் மூலம் கட்டாயம் கிடைக்கும் என்பது உறுதி. ஏற்கனவே பிச்சைக்காரன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார். குபேரா படத்தில் தனுஷின் நடிப்பு அதைவிட சிறப்பாக உள்ளது. படத்தில் இருக்கும் ஒரு பாடலான போய் வா மாமா பாடல் மட்டும் முழுவதுமாக உள்ளது. திரையில் பார்க்க அந்த பாடல் நன்றாக உள்ளது. மற்றொரு பாடல் பாதி பாடல்தான் படத்தில் வருகிறது. படத்தின் பின்னணி இசையும் ஓரளவுக்குத்தான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மூன்று மணி நேரம்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சேகர் கம்முலா சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஆனால் படம் மூன்று மணி நேரத்திற்கு ஓடுகிறது. இதுதான் பிரச்னையாக உள்ளது. இரண்டாம் பாதி படம் ஸ்லோவாக செல்வதால் படம் ஏதோ 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஓடுவதாக உள்ளது. திரைக்கதை நன்றாகவே இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு போயிருந்தால் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் சலிப்பு தட்டாமல் இருந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.

Kuberaa Movie Telugu Fans Review Dhanush Nagarjuna Rashmika Mandanna Performed Well
Photo Credit:

எல்லாம் சூப்பர்: ரசிகை ஒருவர் கூறும்போது, " படம் நன்றாக உள்ளது. ஆனால் ஆவரேஜான படம் தான். மூன்று மணி நேரம் ஓடுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. கதை, நடிப்பு என அனைத்துமே சூப்பர். ஆனால் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணி இசை சூப்பராக உள்ளது. காமெடி காட்சிகள் எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். குபேரா படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்களைக் கொடுத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் படத்தின் நீளம் குறித்து பலரும் விமர்சித்து வருவதையும் படக்குழு கவனத்தில் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X