Kuberaa Public Review: 3 மணி நேரம் வொர்த் ப்ரோ.. தனுஷ்க்கு நேஷனல் அவார்ட் பார்சல்.. குபேரா பப்ளிக் விமர்சனம்

சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலம் தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் படம் எப்படி உள்ளது என ரசிகர்கள் அளித்த பேட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகர் ஒருவர் பேசும்போது, "படத்தின் முதல் பாதியோடு ஒப்பிடும்போது இரண்டாம் பாதி படம் சூப்பராக உள்ளது. படம் முழுவதும் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலரும் நன்றாக நடித்துள்ளார்கள். படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் நன்றாக உள்ளது. தனுஷின் நடிப்பு தான் படமே" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் கூறும்போது, " தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு பின்னர் இந்த படம் சிறப்பான கதை. தனுஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும். அப்படியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கர்ணன் படத்திற்காக தேசிய விருது கொடுக்க வில்லை என கடுப்பில் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Kuberaa Public Review Fans Expecting National Award For Dhanush And Sekhar Kammula
Photo Credit:

வொர்த் படம்: "படம் ரொம்ப நன்றாக உள்ளது. படம் ஸ்லோவா சென்றாலும் சிறப்பாக உள்ளது. படம் கதையை மையமாகக் கொண்டுள்ளது. படத்தில் எங்குமே தொய்வு இல்லை. தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பாக இசையமைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கங்குவா படத்தைப் போல இசையமைக்காமல் சிறப்பாக இசையமைத்துள்ளார். மக்கள் பொறுமையாக இருந்து படத்தை பார்க்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு தகுதியான படம். பான் இந்தியா படமாக எடுத்துள்ளார்கள், படம் வொர்த்" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

பந்தயம் அடிகும்: இன்னொரு ரசிகர் கூறும்போது. " படம் நன்றாக உள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க பக்காவான படம். சினிமாவுக்காக பிச்சை எடுக்கிற காட்சியில் யாரும் நடிக்க மாட்டார்கள். ஒரு ரசிகராக எனக்கு மிகவும் எமோஷனலாக உள்ளது. குப்பைத் தொட்டியில் பொறுக்கும் காட்சி எல்லாம் கண்ணீர் வந்துவிட்டது. இந்த படம் அடுத்த 55 ஆண்டுகளுக்கு நின்னு பேசும். இந்த படம் கட்டாயம் பந்தயம் அடிக்கும் அளவுக்கு உள்ளது. எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக உள்ளது. தர்மான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்க வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Kuberaa Public Review Fans Expecting National Award For Dhanush And Sekhar Kammula
Photo Credit:

படத்தில் குறை: படத்தின் கதை நன்றாக உள்ளது. தனுஷ்க்கு மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. தனுஷ், நாகர்ஜுனா, சேகர் கம்முலா என மூவரும் தங்களது பங்கிற்கு படத்தை தரமாக உயர்த்தியுள்ளனர். படத்தில் சொல்ல வந்த கருத்து சூப்பர். மூன்று மணி நேரம் படம் என்றாலும் படத்தில் குறை சொல்லும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. 3 மணி நேரம் என்பது மட்டும் தான் குறையாக உள்ளது. இன்னும் கொஞ்சம் நேரத்தை குறைத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X