Kubera X Review: குபேரா ட்விட்டர் விமர்சனம்.. தனுஷ் அடிச்சு தூள் பண்ணிட்டாரு.. பக்கா பிளாக்பஸ்டர்!

சென்னை: தக் லைஃப் படத்தின் சொதப்பலுக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனுஷின் குபேரா படத்தின் மீது பெரிய ஆர்வம் இல்லை என்பது டிக்கெட் புக்கிங்கை பார்த்தாலே தெரிகிறது. ஆனால், குபேரா படத்தின் ப்ரீமியர் காட்சிகளுக்குப் பிறகு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்கியராஜ் மற்றும் ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் அமர்க்களமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குபேரா படம் நிச்சயம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்றும் ரசிகர்களின் word of mouth படத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்றும் தற்போது தனுஷ் ரசிகர்கள் தீவிரமாக நம்புகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படம் எப்படி இருக்கு என இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

Kuberaa Twitter Review in Tamil Dhanush Nagarjuna and Rashmika Mandanna delivers a solid movie
Photo Credit:

உலகத்தரமான நடிப்பு: நடிகர் தனுஷ் குபேரா படத்தில் உலகத்தரமான நடிப்பை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைக்கிறார். தனது மொத்த உடல், பொருள் ஆவியையும் காட்சிக்குள் திணித்து அதற்கு உயிரூட்டுகிறார். கூலி படத்துக்கு முன்னாடியே தரமான நடிப்பு சம்பவத்தை இந்த படத்தின் மூலம் நாகார்ஜுனா வெளிப்படுத்தியிருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் எமோஷனல் காட்சிகள் எல்லாம் படத்தை எங்கேயோ கொண்டு சென்று விடுகிறது. டிஎஸ்பி சூப்பரான வேலையை பார்த்திருக்கிறார். மொத்தத்தில் குபேரா படம் வொர்த் வாட்ச் என இந்த நெட்டிசன் ட்விட்டர் விமர்சனம் கொடுத்துள்ளார்.

குபேரா படத்தின் கதை: கொடுமைக்கார கோடீஸ்வரனான நீரஜ், பிச்சைக்காரர்களை பினாமியாக்கி தனது பணத்தை எல்லாம் மணி லாண்டரிங் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அந்த பணியை அவர் தீபக்கை (நாகார்ஜுனா) வைத்து செய்ய வைக்கிறார். இதில், சிக்கும் தேவா (தனுஷ்) 10 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி, ஏழைகளை பணக்காரர்களாக்கும் முயற்சியில் சமீராவை உடன் வைத்துக் கொண்டு செய்கிறார். தேவாவை தேடிப் பிடித்து தீர்த்துக் கட்ட நீரஜ் ஆட்களை அனுப்ப தேவா தப்பித்தாரா? ஏழைகள் வாழ்வு என்ன ஆனது என்பது தான் இந்த குபேரா படத்தின் கதை என படத்தின் சினாப்சிஸ் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷ் இன்ட்ரோ தரம்: திருப்பதி பாலாஜியின் பக்தி பாடலுடன் இடம்பெறும் தனுஷின் அறிமுக காட்சியே தரமாக உள்ளது. பிச்சைக்காரனாகவே தனுஷ் நடித்து இருக்கும் போர்ஷன் எல்லாம் பார்க்கவே கண்களில் கண்ணீர் வந்துவிடும் அளவுக்கு அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளார். அரசு அதிகாரியை பயன்படுத்தி பணக்காரர்கள் செய்யும் பண வேட்டைக்கு எதிராக தேவாவாக தனுஷ் மாறும் இடமெல்லாம் நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்து விட்டார் என கொண்டாடுகின்றனர்.

4.5 ரேட்டிங்: ரமேஷ் பாலா தனுஷின் குபேரா படத்துக்கு 4.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டின் ஆகச்சிறந்த படமாக குபேரா இருக்கும் என்றும் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என 3 பேரும் தங்கள் நடிப்பை முழுமையாக கொடுத்துள்ளனர். சேகர் கம்முலாவின் ரைட்டிங் மற்றும் டைரக்‌ஷன் தான் படத்தை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வந்திருப்பதாக பதிவிட்டுள்ளார். ஓவர்சீஸ் ரிப்போர்ட் பாசிட்டிவாக வந்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் தமிழ்நாட்டு ரசிகர்கள் மற்றும் டோலிவுட் ரசிகர்களின் விமர்சனங்கள் வந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X