Vijay Sethupathi: விஜய் சேதுபதியை இயக்கும் குட் நைட் மணிகண்டன்.. வேற லெவல் காம்போவா இருக்கே!

சென்னை: நடிகர் மணிகண்டன் நடிப்பில் நாளை அதாவது ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி நம்பிக்கையே உள்ளது. காரணம்,, மணிகண்டன் நடிக்கும் படங்களின் கதைகள் மிகவும் தரமாக இருப்பது ஒரு காரணம், மேலும் இவரது அட்டகாசமான இயல்பான நடிப்பு, பலருக்கும் பிடித்துவிட்டது என்பதுதான். இப்படியான நிலையில் இவர் விஜய் சேதிபதியை வைத்து படம் இயக்க, அவரிடம் கதை கூறியுள்ளார்.

நடிகர் மணிகண்டன், நடிகராக உருவெடுப்பதற்கு முன்னர், உதவி இயக்குநராகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். இது இல்லாமல், பல படங்களில் கதை ஆசிரியராகவும் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். விஜய் சேதுபதி, நடித்த விக்ரம் வேதா படத்தின் முழு வசனங்களையும் மணிகண்டன் தான் எழுதினார். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தவர், விஜய் சேதுபதிதான். இது தொடர்பாக மணிகண்டனே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

manikandan vijay sethupathi

மணிகண்டன் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டும் வலுவானதாக இருந்தால் போதும் என நினைக்காமல், கதை சரியான கதையா? இந்தக் கதை திரைப்படமாக உருவாகும்போது, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என எல்லாவற்றையும் யோசித்துத்தான், படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். மேலும் ஒரு படத்திற்காக ஒரு நடிகராகவும் சரி, ஒரு திரைப்படக் கலைஞனாகவும் சரி, சிரமங்களை எதிர் கொள்ள, மெனக்கெடல்களை எதிர் கொள்ள கொஞ்சமும் கவலைப்படாதவர்.

விஜய் சேதுபதி: இவரது பல நாள் கனவு என்றால் படம் இயக்குவதுதான். ஏற்கனவே மறைந்த நடிகர் டெல்லி கணேஷை வைத்து நரை எழுதும் சுயசரிதம் எனும் குறும்படத்தினை இயக்கியுள்ளார். இது விமர்சகர்கள் மத்தியில் பாராட்டினைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்படம் எடுக்க சிறப்பான கதையை எழுதியுள்ளார். இது மட்டும் இல்லாமல், இந்தக் கதையை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். அவருக்கும் இந்தக் கதை பிடித்துவிட்டதாக தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகின்றது. இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளார்கள். மேலும், படத்தினை தயாரிக்க விஜய் சேதுபதி தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களிடம் பேசுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

manikandan vijay sethupathi

அடிமை: மணிகண்டன் குடும்பஸ்தன் படத்தின் புரோமோசனுக்காக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தான் உதவி இயக்குநராக இருந்தபோது தனது இயக்குநர் தன்னை எப்படி எல்லாம், அவமானப்படுத்தினார் எனப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ஒருநாள் தனது இயக்குநரின் செல்போனைக் காணவில்லை என தேடினோம். எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்கு போன் செய்யச் சொன்னார். அப்போது போன் ஷோபா இடுக்கில் இருப்பது தெரியவந்து, நான் போனை எடுத்துவிட்டேன். ஆனால் எனது இயக்குநர் எடுக்க வேண்டாம் எனக் கூறினார். அப்போதுதான் பார்த்தேன், அவர் எனது எண்ணை அடிமை 1 என பதிவு செய்து வைத்திருந்தார் எனக் கூறினார். மணிகண்டனின் இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

manikandan vijay sethupathi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X