குடும்பஸ்தன் முதல் பாட்டல் ராதா வரை.. இந்த வாரம் மத கஜ ராஜாவுக்கு வேட்டு உறுதி!
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு பொங்கல் பண்டிகைக்கு பலத்திரைப்படங்கள் வெளியானது. பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, மதகஜராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியானது. இதில், 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான மதகஜராஜா வசூலை அள்ளி வருகிறது. தற்போது இந்த வாரம், தியேட்டரில் என்ன திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
பாட்டல் ராதா: பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரித்துள்ள திரைப்படம் பாட்டல் ராதா. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவலிங்கம் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். குடி பழக்கத்தால் சீரழிந்த ஒரு இளைஞனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 24ந் தேதி வெளியாக உள்ளது.

குடும்பஸ்தன்: குட் நைட், லவ்வர் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த மணிகண்டன் நடித்திருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார். மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கும் இப்படம் ஜனவரி 24ந் தேதி வெளியாக உள்ளது.
டோமினிக் & த லேடீஸ் பர்ஸ்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள டோமினிக் & த லேடீஸ் பர்ஸ். இப்படத்தில் கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித் ஆகியோர் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்திருக்கும் இப்படம் வரும் 23ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
ராமாயணம்: ராமாயண கதையை ஜப்பானியர்கள் அனிமேஷன் படமாக எடுத்துள்ளார்கள். இப்படத்திற்கு 'ராமாயணம் - The Legend Of Prince Rama' என பெயரிட்டுள்ளார்கள். கீக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 450 ஓவிய கலைஞர்கள் இணைந்து ராமர், சீதா, லக்ஷ்மணன், ராவணன், அனுமன் என அனைத்து ராமாயண கதாபாத்திரங்களை ஒரு லட்சம் பேர் இணைந்து கையால் வரைந்துள்ளார்கள். இத்திரைப்படம், 25ந் தேதி, அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Thalli Manasu(Telugu): பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி, முக்கிய ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் தான் தள்ளி மனசு. குடும்ப வாழ்க்கையின் பல சவால்களை சந்திக்கும் ஒரு நடுத்தர வயது பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்படமான இப்படம், 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











