ஓடிடி-யிலும் சூப்பர் டூப்பர் ஹிட்... குடும்பஸ்தனை பார்த்து கண்ணீர் விடும் ஆண்கள்!

சென்னை: மணிகண்டன், சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குடும்பஸ்தன் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது. படமும் ஹிட் ஆன பின்பும் காதலித்து திருமணம் செய்து குடும்பஸ்தன் ஆனவர்களும் சரி, அப்பா அம்மா பார்த்து திருமணம் செய்து பேமிலிமேன் ஆன இளைஞர்களும் சரி தன்னையே ஸ்கீரினில் பார்ப்பது போல் இருப்பதாக நினைத்து கொண்டு திரும்ப திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர். ஓடிடியில் வெளியாகி நல்ல ரீச் கிடைத்துவிட்டதாம்.

குட்நைட் படத்திற்கு பிறகு மணிகண்டன் லீட் ரோலில் நடித்து ஹீரோவாக ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்து நடித்த லவ்வர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ரொம்ப இயல்பாகவும், எந்தவித பந்தாவும் காட்டாமல் தனது எதார்த்த வாழ்வில் எப்படி இருக்கிறாரோ அப்படியே படத்திலும் தோன்றுவதால் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோ லிஸ்டில் இடம்பிடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மக்களுக்கு பிடித்த படமாகவும் அமைந்தது.

kudumbasthan Ott release Manikandan

ஓடிடி ரிலீஸ்: நக்கலைட்ஸ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான குடும்பஸ்தன் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படம் கடந்த 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான நாளில் இருந்தே படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக பார்வையாளர்களை கவர்ந்த படமாக குடும்பஸ்தன் இருக்கிறதாம். மணிகண்டனின் நடிப்பை பார்த்து பலரும் கண்ணீர் விட்டு அழுகின்றனராம்.

முரட்டு சிங்கிள்: ரியல் வாழ்க்கையில் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே வரும் மணிகண்டன் எப்படி இப்படியொரு கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முடிந்தது என ரசிகர்கள் வியக்கின்றனர். முரட்டு சிங்கிள் மணிகண்டன் திருமணத்திற்கு பிறகு இளைஞர்கள் படும் கஸ்டத்தையம், அவமானங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். மனைவி கர்ப்பம் என்று தெரிந்த பின்பு வரும் மகிழ்ச்சி, வேலை போன பிறகு வீட்டில் மறைத்து வாழும் சூழல், பணத்திற்காக படும் கஸ்டங்கள் என மிடில் கிளாஸ் பையன்களின் வலிகளை கடத்தியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

kudumbasthan Ott release Manikandan

வைரல் வீடியோ: குடும்பஸ்தன் படத்தில் கேட்டரிங் குறித்து வரும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் நடிகை சன்வி மேகனா பேசும் வசனங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் அக்காவின் கனவராக நடித்திருக்கம் சோமசுந்தரம் மணிகண்டனை பார்த்து நீ தோத்துட்ட நவீன் என்று சொல்லும் காட்சிகளும்,எந்த நவீன் பணம் இருக்க நவீனா அல்லது பணம் இல்லாம கால் உடைஞ்சு போய் இருக்கும் நவீனா என பேசும் வசனங்களும் ரசிகர்களை மனதை உருக வைத்துள்ளதாம். விசு படங்களை பார்ப்பது போன்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் காலத்துக்கேற்ற கதையை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமியையும் பாராட்டி வருகின்றனர்.

குடும்பங்கள் கொண்டாட்டம்: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான 4 நாளில் 50 மில்லியன் பேர் பார்த்துள்ளதாக ஜீ5 நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக குடும்பஸ்தன் மாறியுள்ளது. மணிகண்டன் சார் நீங்களும் சீக்கிரம் குடும்பஸ்தன் ஆக வாழ்த்துகள் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X