கலைமாமணி விருது பெற்ற மதுமிதா.. கேக் வெட்டி ஷுட்டிங் ஸ்பாட்டில் உற்சாக வரவேற்பு அளித்த படக்குழு!

சென்னை: கலைமாமணி விருது பெற்ற நடிகை மதுமிதாவுக்கு படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் மதுமிதா. இதில் ஜாங்கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நகைச்சுவை நடிகையாக நடித்து பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மதுமிதா காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் மதுமிதா.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மதுமிதா. இதில் சக ஹவுஸ்மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்ட மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா.

வைரல் வீடியோக்கள்

வைரல் வீடியோக்கள்

லாக்டவுன் நேரத்தில் தான் கார் மற்றும் பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட மதுமிதா தான் தனியாக கார் மற்றும் பைக் ஓட்டிய வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பிரபலங்கள் வாழ்த்து..

பிரபலங்கள் வாழ்த்து..

இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் நடிகை மதுமிதாவுக்கு கலைமாமணி விருது வழங்கியது. கலைமாமணி விருது பெற்ற மதுமிதாவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கும்பாரி ஷுட்டிங் ஸ்பாட்

கும்பாரி ஷுட்டிங் ஸ்பாட்

தான் விருது பெற்ற போட்டோக்களையும் மதுமிதா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை மதுமிதா தான் நடிக்கும் கும்பாரி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கேக் வெட்டியும்

கேக் வெட்டியும்

அப்போது கலைமாமணி விருது பெற்ற மதுமிதாவை கவுரவிக்கும் வகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் படக்குழுவினர் பொன்னாடை போர்த்தியும் கேக் வெட்டியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினர்.

நன்றி கூறிய மது

நன்றி கூறிய மது

அந்த போட்டோக்களையும் நடிகை மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் கும்பாரி படக்குழு, தான் கலைமாமணி விருது வாங்கியதை படப்பிடிப்புத்தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். நன்றி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X