»   »  அஜீத்துக்கு சிலை வைத்த கும்பகோணம் ரசிகர்கள்

அஜீத்துக்கு சிலை வைத்த கும்பகோணம் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: தல அஜீத்துக்கு கும்பகோணம் ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர். அந்த சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

நடிகர், நடிகைகளுக்கு சிலை வைப்பது தமிழகத்தில் புதிய விஷயம் அல்ல. குஷ்பு, நயன்தாராவுக்கு கோவில் கட்டிய புண்ணியவான்கள் வாழும் மாநிலம் இது.

Kumbakonam fans construct a statue for Ajith

இந்நிலையில் விவகேம் பட ரிலீஸை கொண்டாட அஜீத் ரசிகர்கள் அவருக்கு சிலை அமைத்துள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அவருக்கு சிமெண்டால் ஆன சிலையை அமைத்துள்ளனர்.

அந்த சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. சிலை திறப்பு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ரத்ததானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர நெல்லையில் அஜீத்துக்கு வெண்கல சிலை செய்து வைக்க திட்டமிட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kumbakonam Ajith fans have constructed a statue for their favourite thala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil