இயக்குநர் பாலியல் புகாரில் கைது.. ஜாலி மூடில் கும்பமேளா மோனாலிசா.. என்ன செய்றாரு தெரியுமா?

மும்பை: கும்பமேளாவில் ஒரு யூடியூபர் எடுத்த வீடியோவால் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மோனாலிசா. மாலைகள் விற்கும் தொழில் செய்துவந்த அவர் வீடியோவில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் திரையுலகில் வாய்ப்பு தருவதாக அறிவித்தார் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. தான் இயக்கப்போகும் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்கிற படத்தில் நடிக்க வைப்பதாக கூறி 25 லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுத்தார் என்றும் கூறப்படும் சூழலில் பாலியல் புகாரில் சனோஜ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சினிமாவுக்குள் நுழைந்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பு இப்போதைய ஸ்மார்ட் ஃபோன் உலகத்தில் எளிதாகியிருக்கிறது. ஒரு வீடியோவில் ட்ரெண்டாகிவிட்டால் அவர்களுக்கு திரைத்துறைக்கான கதவுகள் திறக்கின்றன என்பதுதான் எதார்த்தாம். தமிழ் சினிமாவில் பலர் அப்படி உள்ளே வந்திருக்கிறார்கள். அதேபோல்தான் மஹா கும்பமேளாவிலும் ஒரு சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?: அதாவது 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனாலிசா என்பவர் ருத்திராட்ச மாலைகள் விற்கும் தொழில் செய்துவந்தார். அந்தத் தொழிலை அவர் தனது குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செய்தார். அப்போது ஒரு யூடியூபர் கண்களில் மோனாலிசா தென்பட்டார். அவரது அழகை கண்டு வியந்த அந்த யூடியூபர் அவரை ஒரு பேட்டி எடுத்தார். பிறகு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தார் மோனாலிசா.

Kumbh Mela Monalisa is What doing while the director has been arrested on a harrassment Case

ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பீடு: அந்த வீடியோவை பார்த்த பலரும் மோனாலிசாவின் அழகை பாராட்டினார்கள். மேலும் அந்தப் பெண்ணின் கண்களை நடிகை ஐஸ்வர்யா ராய் கண்களோடு ஒப்பீடு செய்தார்கள். அதேசமயம் அவருக்கு பிடித்த ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமடைந்ததைத் தொடர்ந்து கண்டிப்பாக திரைத்துறை வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறினார்கள்; அவரும் அதை எதிர்பார்த்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் மோனாலிசாவை திரைத்துறையில் அறிமுகப்படுத்த முடிவு செய்தார்.

தி டைரி ஆஃப் மணிப்பூர்: அதன்படி அவர் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்கிற படத்தை இயக்குவதாகவும்; அதில் மோனாலிசாவுக்கு முக்கியமான ரோல் கொடுக்கிறேன் என்றும் அறிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பெர்மிஷனும் வாங்கிவிட்டார். இதன் காரணமாக வறுமை சூழ்ந்திருந்த தனது குடும்பத்தை இந்த திரைப்ப வாய்ப்பு மீட்டெடுக்கும் என்று நம்பினார் மோனாலிசா. ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் சனோஜ் மிஸ்ரா.

என்ன பாலியல் புகார்?: அதாவது உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர். அவருக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சனோஜ். மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால் இயக்குநர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மோனாலிசா என்ன செய்கிறார்?: எப்படியாவது தனக்கு கிடைத்த திரைத்துறை வாய்ப்பை பயன்படுத்தி முன்னெறிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்த மோனாலிசாவுக்கு சனோஜின் கைது கண்டிப்பாக அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று பலரும் பேசினார்கள். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் ஸ்டோரிகள் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. அதாவது கடை திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு தான் சிறப்பு விருந்தினராக சென்றது, ஃபோட்டோஷூட் செய்தது, ஒரு விழாவில் ஜாலியாக நடனமாடியது போன்ற வீடியோக்களை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சில ஹிந்தி சீரியல்களில் நடிக்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு கொடுப்பதாக சொன்ன இயக்குநர் கைது ஆனாலும் அதை பற்றி எதுவும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த பிரபல்யத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து முயற்சிகளை செய்துவருகிறார். இப்படித்தான் இருக்க வேண்டும். நல்ல வேளை சனோஜ் மிஸ்ரா கைகளில் மோனாலிசா சிக்கவில்லை. கண்டிப்பாக இன்னொரு இயக்குநர் அவருக்கு வாய்ப்பு தருவார் என்று நெட்டிசன்ஸ் அவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X