அச்சச்சோ.. மைனர் பெண் என்றும் பாராமல்.. கும்பமேளா மோனாலிசா காதல் கணவர் மீது பாய்ந்த போக்சோ
சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரக்யராஜில் நடைபெற்ற கும்பமேளா மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மோனாலிசா போஸ்லே. இவரை கும்பமேளா மோனாலிசா என்று கூறினால் பலரும் டக்கென அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இப்படி இருக்கையில் இவர் கடந்த மாதத்தில் தனது காதலரான பர்மான் கானுக்கும் கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது மோனாலிசா மைனர் என்றும் அதனால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததால் அவரது காதலர் பர்மான் கான் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் பதிவின் படி மோனாலிசா கடந்த 2009ஆம் ஆண்டு தான் பிறந்துள்ளார். அப்படி இருக்கையில் அவருக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் போலியான சான்றிதழ்களைக் கொடுத்துத்தான் திருமணம் செய்துள்ளனர். இதனால் அவர் மீது உத்தரபிரதேச காவல்துறை போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











