கேரளம் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கும்பமேளா மோனலிசா திருமணம்.. கண்கலங்கி நின்ற ஹீரோயின்!
திருவனந்தபுரம்: கும்பமேளா மூலம் பிரபலமான மோனலிசா ஒரு படத்தில் நடித்து முடித்த நிலையில், திடீரென கேரளாவில் தனது காதலருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சற்றுமுன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர். அதன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்தூரைச் சேர்ந்த மோனி போஸ்லே என்கிற மோனலிசா, தனது காதலன் பர்மான் கானுடன் தம்பானூர் காவல் நிலையத்தில் அடைக்கலம் தேடியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு தேடி கேரளா வந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசாவுக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பர்மானுக்கும் காதல் மலர்ந்தது. மோனியின் குடும்பம் அவர்களின் காதலுக்கு தடை போட்டது. மோனலிசா இப்போது தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். திருமணமாகி கணவருடன் சென்று விட்டால் வருமானம் பாதிக்குமே என பெற்றோர்கள் நினைத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மத ரீதியிலான பிரச்னையும் இருக்கும் என்கின்றனர்.
கும்பமேளா மோனலிசா திருமணம்: இந்நிலையில், பூவாரில் நடந்த திரைப்படப் படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது, மோனலிசா காதலனுடன் தம்பானூர் காவல் நிலையம் வந்து புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து, மோனியின் தந்தை ஜெய் சிங் போஸ்லே தம்பானூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். மோனலிசாவும் அவரது காதலர் பர்மான் கானும் மேஜர் என்பதால் பிரச்னை ஏதும் பண்ணாமல் திருமணத்தை நடத்தி வைக்க அறிவுறுத்தினர்.
எளிமையான முறையில் திருமணம்: இந்நிலையில், இன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் எளிமையான முறையில் நடிகை மோனலிசா தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு தனது காதல் திருமணத்தில் முடிந்த நிலையில், காதலர் நெற்றி வகிடில் குங்குமமிட்டதும் கண்கலங்கி விட்டார் நடிகை மோனலிசா.
குவியும் வாழ்த்து: கும்பமேளாவில் பிரபலமாகி கேரளா கோயிலில் காதலரை கரம்பிடித்துள்ள மோனலிசாவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு மோனலிசா தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கூடிய விரைவில் அதற்கு அவரே சரியான பதிலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











