கும்பமேளா மோனாலிசாவை நியாபகம் இருக்கா?.. அட ஆளே மாறிட்டாங்களே ப்பா.. ட்ரெண்டாகும் வீடியோ
மும்பை: கும்பமேளாவில் ருத்திராட்ச மாலைகளை விற்ற மோனாலிசா என்ற பெண் ஒரு யூடியூபர் எடுத்த வீடியோவில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒரே நைட்டில் ஃபேமஸானார். அவரது க்யூட் ரியாக்ஷன்கள், அழகு என அத்தனையும் ரசிக்கும்படி இருந்ததை அடுத்து அவரை வைத்து படம் இயக்கப்போவதாக சனோஜ் மிஸ்ரா என்ற இயக்குநர் அறிவித்து முன் பணத்தையும் கொடுத்தார். ஆனால் அவர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில் மோனாலிசா தொடர்பான வீடியோ ஒன்று மீண்டும் ட்ரெண்டாகியிருக்கிறது.
இப்போதைய ஸ்மார்ட் ஃபோன் உலகத்தில் ஒருவருக்கு திறமை இருந்து அதனை சரியான முறையில் வெளிப்படுத்தினால் அவரும் செலிபிரிட்டிதான் என்ற நிலைமை இருக்கிறது. பலருக்கு திறமை இருந்தாலும் அவர்கள் வெளியே தெரியாமலும் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் மற்றவர்கள் எடுக்கும் வீடியோக்களாலும் பிரபலமாவதும் உண்டு. அப்படித்தான் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனாலிசா என்பவரும்.
யார் இந்த மோனாலிசா: இந்தூரை பூர்வீகமாகக் கொண்ட மோனாலிசாவின் குடும்பம் வறுமையில் உழன்ற குடும்பம். அவர்களது பிரதான தொழிலே ருத்திராட்ச மாலைகளை விற்பதுதான். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மஹா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் ருத்திராட்ச மாலைகளை விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்றிருந்த ஒரு யூடியூபர் மோனாலிசாவின் அழகை கண்டு அவரை வீடியோ எடுத்தார். அந்த வீடியோ இந்தியா முழுவதும் பயங்கரமாக ட்ரெண்டானது.

செம க்யூட்: அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அட இவ்வளவு அழகாக இருக்காங்களே என்று ஏகத்துக்கும் வர்ணிக்க தொடங்கினார்கள். முக்கியமாக அவரது கண்களை இந்திய அளவில் ஃபேமஸாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் கண்களோடு ஒப்பிடவும் செய்தார்கள். சமூக வலைதளங்கள் முழுவதும் தொடர்ந்து சில நாட்கள் அவரது வீடியோக்களே உலா வந்தன. பலரும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள். இந்த விஷயம் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுக்கும் தென்பட்டது.
பட வாய்ப்பு: உடனடியாக அவர் மோனாலிசாவை தன்னுடைய தி டைரி ஆஃப் மணிப்பூர் என்கிற படத்தில் கமிட் செய்தார். அதற்கான முன் பணத்தையும் கொடுத்தார். தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இனிமேல் தன்னுடைய குடும்பம் எந்தவிதமான கஷ்டமும் பட வேண்டாம். திரைத்துறை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது பணம் சம்பாதித்து தானும், தனது குடும்பமும் செட்டிலாகிவிடலாம் என்றும் ஆர்வத்தோடு காத்திருந்தார் மோனாலிசா.
இயக்குநர் கைது: ஆனால் யாரும் எதிர்பார்க்காதவகையில் மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறையில் இருக்கிறார் அவர். சனோஜின் கைதால் மோனாலிசா கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக்கொண்டு தனக்கு கிடைத்த பிரபல்யத்தை சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன்படி கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
ட்ரெண்டாகும் வீடியோ: அதுமட்டுமின்றி சில ஹிந்தி சீரியல்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மோனாலிசா மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ, 'அட மோனாலிசாவா இவங்க. ஆளே மாறி செம மாடர்னா இருக்காங்களே' என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ட்ரெண்டாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











