சொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’

கும்கி 2 படத்திற்கு நாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

Recommended Video

கும்கி 2 விவரங்கள் : அதிகாரப்பூரவ தகவல் வெளியானது- வீடியோ

சென்னை: பிரபு சாலமனின் கும்கி 2 படத்தில் மதியழகன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனம் அறிமுகமான படம் கும்கி. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் பாடல்களும் ஹிட்டடித்தன.

அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன்.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

கும்கி படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமிமேனனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. எனவே இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் உலா வந்தன.

மதியழகன்:

மதியழகன்:

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கும்கி 2 படக்குழு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார்.

யானை:

யானை:

இவர்கள் தவிர, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்' திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘உன்னிகிருஷ்ணன்' என்ற யானை நடித்து வருகிறது.

நிவேதா பெத்துராஜ்:

நிவேதா பெத்துராஜ்:

நாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவு:

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பாளராகப் புவன், கலை இயக்குநராகத் தென்னரசு, சண்டைக்காட்சிகளை ஸ்டன்ட் சிவா ஆகியோர் கவனித்துக் கொள்கின்றனர்.

இதயக்கனி:

இதயக்கனி:

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி' படப்பிடிப்பிற்குப் பிறகு ‘கும்கி 2' படப்பிடிப்பு தான் இங்கு நடைபெறுகிறது.

நாயகி இல்லாத காட்சிகள்:

நாயகி இல்லாத காட்சிகள்:

முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாம். எனவே, கதைக்கு பொருத்தமான நாயகியைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறது படக்குழு. தற்போது நாயகி இல்லாத காட்சிகளாக படமாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X