Kumki 2: கும்கி 2 படப்பிடிப்பில் கதாநாயகனை முட்டி தள்ளிய யானை.. ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்!

சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கும்கி. இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமானார். மேலும் கதாநாயகியாக லட்சுமி மேனன் அறிமுகம் ஆனார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் கிளைமாக்ஸ் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள படப்பிடிப்புத் தள வீடியோவில் படத்தின் கதாநாயகன் மதி யானையின் தும்பிக்கையை தனது தோல் மீது வைத்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு கொண்டு உள்ளது. அப்போது யானை நடிகர் மதியை தனது தும்பிக்கையால் முட்டித் தள்ளுகிறது. உடனே அவர் கிட்டத்தட்ட பத்து அடி பின்னால், நொடிப்பொழுதில் பின்னால் சென்று விழுகின்றார். நல்லவேளை கதாநாயகனுக்கு அடி எதுவும் படவில்லை. தும்பிக்கையால் தள்ளிவிட்டதை போல தந்தத்தால் தள்ளிவிட்டு இருந்தால் நடிகருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டிருக்கும். இந்த காட்சியைப் பார்க்கும் போது நடிகர் தனது உயிரை துச்சமாக கருதி நடித்துள்ளார் என்பது புரிகிறது.

Kumki 2 Shooting Spot Video elephant Attacks Hero Mathi Shocking Video Goes Trending

பகீர் வீடியோ: இந்த வீடியோ காட்சிகளை பார்த்தாலே பதைபதைக்கிறது. இப்படி பல காட்சிகள் படமாக்கும் போது இப்படியான விபத்துகள் நடந்திருக்குமோ என்று பலரும் பதைபதைத்து கேட்டு வருகிறார்கள். கும்கி 2 படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

பாராட்டும் இயக்குநர்: படத்தின் கதாநாயகன் குறித்து ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கதாநாயகன் குறித்து படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் குறிப்பிடுகையில், "ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்கு தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாக காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Kumki 2 Shooting Spot Video elephant Attacks Hero Mathi Shocking Video Goes Trending

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X