விக்ரம் பிரபு ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த விஷ்ணு விஷால்

By Siva

சென்னை: விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த விக்ரம் பிரபு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனனை வைத்து கும்கி படத்தை எடுத்த பிரபு சாலமன் தனது புதிய படத்தில் விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபு சாலமன், விஷ்ணு விஷால் இணையும் படம் கும்கி இரண்டாம் பாகம் என்று செய்திகள் வெளியாகின.

விக்ரம் பிரபு நல்லா தானே நடித்திருந்தார் அப்படி இருக்கும்போது அவரை ஏன் பிரபு சாலமன் கழற்றிவிட்டார் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

கும்கி 2 படத்தில் ஹீரோவையே மாற்றிவிட்டார்கள் என்றால் லட்சுமி மேனனை மட்டும் மாற்றாமலா இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் கும்கி 2 பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது.

விஷ்ணு விஷால்

நானும் பிரபு சாலமனும் சேர்ந்து பணியாற்றும் ஹாதி மேரே சாதி படம் கும்கி 2 படம் கிடையாது. மேலும் இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை என்று ட்வீட்டியுள்ளார் விஷ்ணு விஷால். மூன்று மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். தெலுங்கில் ராணாவும் உள்ளார்.

உஷாரு

உஷாரு

பிரபு சாலமன் படத்தின் ஷூட்டிங் மூணாரில் நடந்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவுகிறது ஜாக்கிரதை விஷ்ணு விஷால் என்று ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடரி

இந்த படம் தொடரி மாதிரி இருக்காது என்று நம்புகிறோம் என்று ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X