குடும்ப உறவினர்கள் சூழ.. காதலியை மணந்தார் ’கும்கி’ அஸ்வின் ராஜா.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: 'கும்கி' படத்தில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் அஸ்வின் ராஜா தனது காதலியை இன்று மணந்து கொண்டார்.

Recommended Video

KUMKI ASHVIN RAJA CHAT | காதலிக்காக கும்கி படம் | V-CONNECT | FILMIBEAT TAMIL

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் தான் அஸ்வின் ராஜா.

லாக்டவுன் என்பதால், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமல், குடும்ப உறவினர்களுடன் சிம்பிளாக சென்னையில் இன்று தனது திருமணத்தை செய்துக் கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக படிக்காத மக்கு பிள்ளையாக நடித்து ஆர்யா மற்றும் சந்தானத்தின் உயிரை வாங்கும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். கும்கி படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் செய்த சேட்டை, இவர் பெயருடன் 'கும்கி'யை கூடவே சேர்த்துக் கொண்டது. வந்தான் வென்றான், தில்லு முல்லு என பல படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சென்னை கே.கே. நகரை சேர்ந்த வித்யா ஸ்ரீ என்பவரை நடிகர் அஸ்வின் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பை படித்து முடித்துள்ள வித்யா ஸ்ரீயை கும்கி அஸ்வின் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டு, ஜூன் 24ம் தேதியான இன்று திருமணம் நடைபெறும் என சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

20 பேர் மட்டுமே

20 பேர் மட்டுமே

தயாரிப்பாளரின் மகனும் பிரபல நடிகருமான அஸ்வினின் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் வருகை தர முடியாத சூழல் லாக்டவுன் காரணமாக உருவாகி இருக்கிறது. நெருங்கிய குடும்ப உறவினர்கள் வெறும் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதல் கதை

காதல் கதை

சமீபத்தில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு தனது 5 வருட காதல் கதையை வி கனெக்ட் நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வின் சொல்லி இருந்தார். பெற்றோர்களின் விருப்பத்திற்காக அமெரிக்காவில் போய் எம்.எஸ் படித்து வந்தார். போனில் தான் எங்கள் காதல் கதை வளர்ந்தது. வீட்டிலேயே தனது திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

வீட்டுக்கு தெரியாமல் தனது காதலியுடன் வெளியே சுற்றிய பல அனுபவங்களை வி கனெக்ட் சாட்டில் பேசியுள்ளார் நடிகர் அஸ்வின். நயன்தாரா, ஆர்யா, விக்ரம் பிரபு, சிவா என பல நடிகர்களுடன் நடித்துள்ள அஸ்வினின் திருமண செய்தி அறிந்த பிரபலங்கள் அவருக்கு போன் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X