என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
சென்னை: சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே அத்தி பூத்தது போல மற்றவர்களை தூக்கிவிட நினைப்பார்கள். ஆனால், பலர் அடுத்தவனை எப்போ கீழே இழுத்துவிட்டு மேலே வரலாம் என்றுதான் யோசிப்பார்கள். சாட்டை உள்ளிட்ட படங்களில் வில்லத்தனத்தை காட்டி நடித்த தம்பி ராமைய்யாவின் ரியல் கேரக்டரும் இப்படியொரு வில்லத்தனம் வாய்ந்ததா என ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக கும்கி படத்தில் ஜோஷியராக நடித்த சுப்பையா சமீபத்தில் அளித்த பேட்டி பகீர் கிளப்பி உள்ளது.
68 வயதாகும் தம்பி ராமையா 1999ம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். மனுநீதி, கோவில்பட்டி வீரலட்சுமி, அருள், ஜோர், கோடம்பாக்கம், ஆறு, கோவை பிரதர்ஸ், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, சில்லுனு ஒரு காதல், தனி ஒருவன், சாட்டை, விஸ்வாசம், விநோதய சித்தம் சமீபத்தில் வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து முடிக்கக் கூடியவர் தம்பி ராமையா. மைனா மற்றும் கும்கி படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்து இழுத்தது. வடிவேலுவுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவருடன் இணைந்து நடிக்காமல் தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
கும்கி: மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான கும்கி படத்தில் விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்திருப்பார். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் ஜோசியர் கதாபாத்திரத்தில் சுப்பையா என்பவர் நடித்திருப்பார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தம்பி ராமையா கார் டிரைவர்: கும்கி படத்தில் ஜோசியரா நடித்த சுப்பையா வேறு யாருமில்லை நடிகர் தம்பி ராமையாவின் கார் டிரைவர் தான். ஆரம்பத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு பெண் ஜோசியர் ஒருவரை புக் செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் பிரபு சாலமன் ஆம்பள ஜோசியம் தான் வேண்டும் என உறுதியாகக் கூறிவிட, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தம்பி ராமையாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த என்னை அந்த காட்சியில் நடிக்க வைத்தனர்.
கும்கி காமெடி காட்சி: பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியில் தம்பி ராமையாவுக்கு ஒருவர் ஜோசியம் பார்த்திருப்பார். அவர், "துக்கப்பட்டு, துயரப்பட்டு, துன்பப்பட்டு போவீங்க, அதுக்கு பின்னர் வாழ்க்கை சரியாகிடுமான்னு தம்பி ராமையா கேட்க அதுவே பழகிடும் என பேசிய காமெடிக்கு தியேட்டரில் சிரிக்காத ஆட்களே இல்லை" அந்த காமெடிக்கு நடித்த தம்பி ராமையாவின் கார் டிரைவர் சுப்பையாவை அந்தக் காட்சி முடிந்ததும் தம்பி ராமையா அடித்ததாக சமீபத்திய பேட்டியில் சுப்பையா கூறியுள்ளார்.

5 விரல் பதியும்படி அறை: தம்பி ராமையாவுக்கு ஆரம்பத்திலிருந்து தான் நடிப்பது பிடிக்கவில்லை. மேலும் அந்த காட்சியை ஒரே டேக்கில் நடித்து விட்ட நிலையில், என்னை விட நல்லா நடிப்பியான்னு அதே இடத்தில் 5 விரல் கன்னத்தில் பதியும்படி அறைந்து விட்டார். நான் நல்லா நடிச்சு எல்லோரிடமும் கைதட்டல் வாங்கியதும் பொறாமை தாங்கவில்லை. அந்த காட்சியிலேயே அவர் என்னை அடிப்பது போன்ற சீன் இருக்கும். அதில், அவர் உண்மையாகவே என்னை தாக்கினார். தலையில், அடிபட்டு ரத்தம் வந்தது. அந்த ஷாட் முடிந்தும் அவர் ஓங்கி கன்னத்தில் இனிமே நடிப்பியான்னு அடிச்சதை எப்போதும் மறக்க மாட்டேன் என பேசியுள்ளார்.
சங்கை அறுத்துருப்பேன்: சினிமா ஆசை மட்டும் இல்லை என்றால் தம்பி ராமையா அடித்தவுடனே அவரது சங்கை அறுத்துருப்பேன். ஆனால், எனக்குள் இருந்த சினிமா ஆசை காரணமாக அமைதியாக இருந்து விட்டேன். அலைகள் ஓய்வதில்லை படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் மிஸ் ஆகிவிட்டது என சுப்பையா கூறியுள்ளார். அஞ்சு வகை சாப்பாடு போட்டு கடைசியில் மலம் அள்ளி வைத்து விடுவார் தம்பி ராமைய்யா அவர் ரொம்ப மோசமான ஆள் என குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











