»   »  அதிமுகவில் குஞ்சாரம்மாள்!

அதிமுகவில் குஞ்சாரம்மாள்!

Subscribe to Oneindia Tamil

நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட நடிகையுமான தேனி குஞ்சாரம்மாள் இன்றுஅதிமுகவில் இணைந்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அக் கட்சியின் தலைமைக் கழகஅலுவலகத்திற்கு வந்தார். அப்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது தேனி குஞ்சாரம்மாவும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தனது உரத்த குரலில் பாட்டுப் பாடிஅசத்தினார் குஞ்சாரம்மாள்.

இதேபோல திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் (இவர் சசியின் உறவினர்) தனது33வது பிறந்த நாளையொட்டி தான் எழுதிய கவிதையை பிரமாண்டமானபுகைப்படமாக்கி அதை ஜெயலலிதாவிடம் கொடுத்து ஆசி பெற்றார்.

அதே போல பாஜக மகளிர் அணிச் செயலாளர் சத்தியபாமாவும் அதிமுகவில் இணைந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil