குஞ்சுமோனுக்கு ஜெயில்!
திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு காசோலை மோசடி வழக்கில்வழங்கப்பட்ட 1 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை விரைவு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்கேரளாவைச் சேர்ந்த கே.டி.குஞசுமோன்.
ரட்சகன் என்ற படத்தைத் தயாரித்த அவர் அதனால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால் படத்தயாரிப்பையே விட்டு விட்டார்.
இந் நிலையில் கடந்த 1997ம் ஆண்டு விஜய நடித்த என்றென்றும் காதல் என்றபடத்தைத் தயாரிப்பதற்காக சுரேஷ் என்ற பைனான்சியரிடம் ரூ. 75 லட்சம் பணத்தைக்கடனாக வாங்கினார் குஞ்சுமோன்.
அதில் ரூ. 50 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். மீதமுள்ள ரூ. 25 லட்சம்பணத்திற்கு காசோலை கொடுத்தார்.
அந்தப் பணத்தை சுரேஷ் வங்கியில் போட்டபோது குஞ்சுமோன் கணக்கில் பணம்இல்லாததால் காசோலை திரும்பி விட்டது.
இதையடுத்து சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் குஞ்சுமோன் மீதுகாசோலை மோசடி வழக்கை சுரேஷ் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குஞ்சுமோனுக்கு 1 ஆண்டு சிறைதண்டனைமற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் குஞ்சுமோன் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராதா, கீழ் நீதிமன்றம் பிறப்பித்ததீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications