இசையமைப்பாளர் ஆனார் சிம்பு தம்பி குறளரசன்!
அண்ணன் வழியில் ஹீரோவாகக் களமிறங்குவார் என்று சொல்லப்பட்ட சிம்புவின் தம்பி குறளரசன், தந்தை வழியில் இசையமைப்பாளராகிவிட்டார்.
டி ராஜேந்தரின் இரு மகன்களில் மூத்தவரான சிம்பு முன்னணி நடிகராக உள்ளார்.
இளையமகன் குறளரசனையும் கதாநாயகனாக்க முயற்சித்து வந்தார் டிஆர்.

இளங்காதலர்கள்
தான் அடுத்து இயக்கும் இளங்காதலர்கள் படத்தின் ஹீரோ குறளரசன் என்றுதான் அவர் முதலில் கூறினார்.

இசையமைப்பாளர்
ஆனால் அதுவரை காத்திருக்க விரும்பாத குறளரசன், இப்போது இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஹீரோ சிம்பு. இயக்குநர் பாண்டிராஜ்.

அப்பாவிடம் பயிற்சி
இசையமைப்பாளருக்கான முறையான பயிற்சியை தன் அப்பாவிடமே கற்றுக் கொண்டாராம் குறளரசன். கர்நாடக சங்கீதத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்துக்காக இப்போதே இசைப் பணிகளைத் தொடங்கிவிட்டாராம் குறள்.

ஹீரோவாகவும் ஆசைதான்...
இசையமைப்பதோடு நின்றுவிடுவாரா குறளரசன்? என்று டிஆரிடம் கேட்டால், "உரிய நேரத்தில் குறளும் ஹீரோவாக வருவார்" என்கிறார். குறளரசனுக்கும் அந்த ஆசை இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











