twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நம்ம ஆளு: முட்டல், மோதல்களை மறந்து... பாண்டிராஜ்க்கு நன்றி சொன்ன குறளரசன்

    By Manjula
    |

    சென்னை: இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ்க்கு, இசையமைப்பாளர் குறளரசன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இது நம்ம ஆளு படத்தின் இசை மற்றும் பாடல்களை சிம்புவின் பிறந்தநாளான நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

    இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் கலந்து கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக விழாவை மிகவும் சிம்பிளாக முடித்து விட்டனர்.

    இது நம்ம ஆளு

    இது நம்ம ஆளு

    முன்னாள் காதலர்கள் சிம்பு, நயன்தாராவை வைத்து பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் சிம்பு நாயகிகள் நயன்தாரா, ஆண்ட்ரியா உட்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவில்லை.

    சிம்பு பிறந்த நாளில்

    சிம்பு பிறந்த நாளில்

    படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் "சிம்பு பிறந்தநாளில் ‘இது நம்ம ஆளு' படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் சிம்பு, குறளரசனுடன் இணைந்து நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன்.

    குறளரசனுக்கும்

    குறளரசனுக்கும்

    சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதும் ஹீரோவாக அறிமுகப்படுத்திய போதும் நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள்.அதே போல இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் குறளரசனுக்கும் உங்கள் ஆதரவை தரவேண்டும்.

    நயனுக்குப் பதில் ஆண்ட்ரியா

    நயனுக்குப் பதில் ஆண்ட்ரியா

    இது நம்ம ஆளு படத்தில் இன்னும் இரண்டு பாடல்களை எடுக்கவிருக்கிறோம். ஒரு பாடலை ஆண்ட்ரியாவை வைத்தும் மற்றொரு பாடலை பிரம்மாண்டமாகவும் படமாக்க இருக்கிறோம். மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது' என்று கூறினார்.

    அண்ணன் படத்திற்கு

    அண்ணன் படத்திற்கு

    தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் குறளரசன் "முதலில் என் குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் படத்திற்கு முதலில் இசையமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்திற்காக நிறைய டியூன்களை தயார் செய்தேன். அதில் சிறந்ததை தேர்வு செய்து இசையமைத்திருக்கிறேன்.

    யுவன், ஸ்ருதி ஹாசன்

    யுவன், ஸ்ருதி ஹாசன்

    இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஸ்ருதி ஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.

    பாண்டிராஜ்க்கு நன்றி

    பாண்டிராஜ்க்கு நன்றி

    இந்த சமயத்தில் இயக்குனர் பாண்டிராஜ்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பற்றி நிறைய செய்திகள் வந்தது. பாடல்களுக்கு இசையமைக்க லேட் செய்கிறேன் என்று. எல்லா பாடல்களும் நல்லதாகவும், சிறப்பாகவும் வரவேண்டும் என்பதற்காகத்தான் தாமதம் ஆனது. நான் இசையமைத்த பாடல்களை இயக்குனர் பாண்டிராஜ் கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்று சொன்னார்" இவ்வாறு குறளரசன் கூறினார்.

    முன்னதாக

    முன்னதாக

    /news/idhu-namma-aalu-pandiraj-clash-with-kuralarasan-036583.html/news/idhu-namma-aalu-pandiraj-clash-with-kuralarasan-036583.html

    இது நம்ம ஆளு பாடல்கள் விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் குறளரசன் இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Music Composer Kuralarasan said Thanks to Director Pandiraj in Idhu Namma Aalu Audio Launch Function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X