முஸ்லீம் பெண்ணை மணக்கும் சிம்பு தம்பி: ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்
சென்னை: சிம்புவின் தம்பி குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்கிறார்.
சிம்புவின் தம்பி குறளரசன் அண்மையில் இஸ்லாத்திற்கு மாறினார். இசையமைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு மாறுவது ஃபேஷனாகி வருகிறது என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தனது காதலியை திருமணம் செய்ய மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.

குறளரசன்
குறளரசன் நபீலா அகமது என்கிற பெண்ணை வரும் 26ம் தேதி நிக்காஹ் செய்ய உள்ளார். அதன் பிறகு 29ம் தேதி அவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு பத்திரிகை வெளியாகியுள்ளது.
அழைப்பிதழ்
டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழை அளித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாம்
குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யத் தான் கடந்த பிப்ரவரி மாதம் மதம் மாறினார் என்று விமர்சிக்கிறார்கள். மதம் மாறுவது அவரது தனிப்பட்ட விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்
சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார் குறளரசன். தொடர்ந்து அவர் இசையமைப்பாளராக இருக்க விரும்புகிறார். குறளரசன் மதம் மாறியதில் அவரின் பெற்றோருக்கு வருத்தம் இல்லை. மகனின் விருப்பமே தங்களின் விருப்பம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











