twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்

    By Siva
    |

    Recommended Video

    அதிமுக, திமுக-விற்கு எதிராக களமிறங்கும் டி.ராஜேந்தர்- வீடியோ

    சென்னை: என் மகன் குறளரசன் பெயரில் வெளியான ட்வீட் உண்மை இல்லை. அது போலி கணக்கு என்று டி. ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

    அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைத்து இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் போட்டார். அதை பார்த்த தல ரசிகர்கள் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்றார்கள்.

    இந்நிலையில் சுசீந்திரனின் ட்வீட்டுக்கு பதில் அளிப்பது போன்று சிம்புவின் தம்பி குறளசரன் பெயரில் கமெண்ட் வெளியானது.

    அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா? அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா?

    முதல்வர்

    முதல்வர்

    உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும். தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும். எங்க அப்பா முதல்வர் ஆவார் என்று குறளசரன் பெயரில் ட்வீட் வெளியானது.

    டி. ராஜேந்தர்

    டி. ராஜேந்தர்

    மகன் பெயரில் ட்வீட் வெளியானதை பார்த்த டி. ராஜேந்தர் அவசரம் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விளக்கம் அளித்துள்ளார். நானோ, என் மகன் குறளரசனோ ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கவில்லை. பிரபலங்களின் சமூக வலைதள கணக்கில் ப்ளூ டிக் இருந்தால் மட்டுமே அது அவர்களின் கணக்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்கிறார் டி. ராஜேந்தர்.

    துஷ்பிரயோகம்

    துஷ்பிரயோகம்

    பலர் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு துவங்கி அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் என் இளைய மகன் குறளரசனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே குர்ஆன் அரசன் என்ற போலி பெயரில் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். என் இளைய மகன் குறளசரனுக்கும், அரசியலுக்கும் தொடர்பே இல்லை. அவர் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

    தேர்தல்

    தேர்தல்

    இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இன்னும் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். எங்கள் லட்சிய திமுக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்குவோம் என்று கூறியதற்காக என் மகன் பெயரில் ட்வீட் செய்வதா. நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. லதிமுக ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு எங்க அப்பா முதல்வராவார் என்று ட்வீட் செய்துள்ளனர். அது தவறான செய்தி. அந்த போலி கணக்கு வைத்துள்ளவர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். குறளரசன் எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

    English summary
    T. Rajendar has made it clear that his youngest son Kuralarasan doesn't have an account on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X