twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் வரவேற்பு பெற்று, தெலுங்கில் ரீமேக் ஆகும் 'குரங்கு பொம்மை'!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல் நடித்த 'குரங்கு பொம்மை' படம் கடந்த 1-ந் தேதி வெளிவந்தது. அஜனீஷ் என்பவர் இசை அமைத்திருந்தார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்ததிருந்தார். ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்திருந்தது.

    பணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட அசாதாரண முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதை ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் சொன்ன படம் 'குரங்கு பொம்மை'. இந்தப் படத்தில் விதார்த்தின் தந்தையாக நடித்த பாரதிராஜாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    Kurangu bommai remake in telugu

    இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். எஸ் ஃபோக்கஸ் என்ற நிறுவனம் இதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. 'திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி.

    Kurangu bommai remake in telugu

    குரங்கு பொம்மை படம் ஒரு அற்புதமான படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்குப் பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் எஸ் ஃபோக்கஸ் நிறுவன உரிமையாளர் எம். சரவணன்.

    சமீபகாலமாக, புதுமுக இயக்குநர்கள் பலர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வெளிவந்த 'குரங்கு பொம்மை' படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பு அறிமுக இயக்குநர்களை ஊக்கப்படுத்தும் என நம்பலாம்.

    English summary
    'Kurangu bommai' were directed by Nithilan which lead by vidharth. The film was released in the Crime Thriller genre and received a positive response among fans. The film will be remaked by S Focus in Telugu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X