twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குருஷேத்ரம்... கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதை - குழந்தைகள் பார்க்கணும்

    |

    சென்னை: கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதையை குருஷேத்திரம் என்ற பெயரில் படமாக எடுத்திருக்கின்றனர். இதில் கர்ணனாக நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். இது கௌரவர்களின் கதை. துரியோதனன் கர்ணன் நட்பை பாராட்டும் இந்த படத்தையும் போர்க்கள காட்சிகளையும் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹீரோ அர்ஜூன்.

    முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார்.

    ஜே.கே.பைரவி எழுத்தில் இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் "குருக்ஷேத்திரம்" கன்னட திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கன்னட மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. "குருக்ஷேத்திரம்" திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தமிழ் டப்பிங் செய்யப்பட்டு நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது.

    அர்ஜூன் சினேகா

    அர்ஜூன் சினேகா

    நடிகர் அர்ஜுனும், நடிகை சினேகாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் தர்ஷன், அம்பரீஷ், வி.ரவிச்சந்திரன், பி.ரவிசங்கர், மேகனா ராஜ், சோனு சூட், சந்தன் குமார், டேனிஷ் அக்தர் சைஃபி, நிகில் குமார், ஹரிப்பிரியா, ஷாஹிகுமார், சீனிவாச மூர்த்தி, ஸ்ரீநாத் ஆகியோர்களும் நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் இதிகாசத்தை கண்முன் கொண்டு வரப்போகிறது. இதன் கதை கரு ராணா எழுதிய புத்தகத்தில் (Gadhayuddha) இருந்து எடுக்க பட்டிருக்கிறது.

    பிரம்மாண்ட சண்டை காட்சிகள்

    பிரம்மாண்ட சண்டை காட்சிகள்

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் முனிரத்னா, " இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தாணு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை இதை சண்டைப்பயிற்சி செய்தது 'கனல் கண்ணன்'.

    துரியோதனன்

    துரியோதனன்

    மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம். அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3டி மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது , கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் இப்படம் பெற்றுள்ளது. தமிழில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

    பலம் வாய்ந்த கர்ணன்

    பலம் வாய்ந்த கர்ணன்

    நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறோம். 3டி படம் எடுக்க காரணமும் முனிரத்னாதான். இந்தப் படத்தில் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் காண்பிப்பதற்காக அவர் 35 கிலோ எடையை வைத்து நடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு நடிகர்களின் மேல் காயம் விழும் அளவிற்கு நடிகர்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கர்ணன் துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி என்றார்.

    சிவாஜி போல நடித்த கர்ணன்

    சிவாஜி போல நடித்த கர்ணன்

    கலைப்புலி எஸ் தாணு நடிகர் அர்ஜூனை வெகுவாக பாராட்டினார். "1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன். இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் 'கர்ணன்' தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் என்றார்.

    நடிகர் தர்ஷன்

    நடிகர் தர்ஷன்

    நடிகர் தர்ஷன் பேசும்போது , " நான் சென்னையில் உள்ள அடையாரில்தான் படித்தேன், நான் லைட் பாய் ஆக தான் வேலைக்கு சேர்ந்தேன். சினிமாவில் படிப்படியாக முன்னேறினேன். இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னா தான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம், இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவரின் நடிப்பும் திறமையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 3டி 2டி என இரண்டு முறை நடித்து மற்றும் டப்பிங் செய்துள்ளோம் என்றார்.

    அர்ஜூன் மகிழ்ச்சி

    அர்ஜூன் மகிழ்ச்சி

    இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று நடிகர் அர்ஜூன் கூறினார். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார் இந்த படத்தில் அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது . இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம் என்றார் அர்ஜூன்.

    போர்க்கள சண்டைகள்

    போர்க்கள சண்டைகள்

    சண்டைப்பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை காட்சிகளின் இறுதியில் படம் நாங்கள் பஞ்சபூதங்கள் மையமாக வைத்து எடுத்தோம் . ஆகையால் ஆரம்பம் முதலே பீமனுக்கு மிகுந்த பலம் பெற்றவர் போல் காண்பித்து எடுக்கப்பட்டது. அதே போல், அர்ஜூன் இந்தப் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார் என்றார். படத்தொகுப்பாளர் ஹர்ஷா பேசும் போது, டப்பிங் முன்பு இந்தப் படத்தினை பார்த்தபோதே அருமையான இந்த படைப்பினை பார்த்து வியந்தோம் . படம் எடிட்டிங் செய்த பின்பும் இதே தான் நினைத்தோம். இந்தப் படம் தாணு மூலம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை தெரிந்த பின் எங்களுக்கு படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது என்றார்.

    பிரம்மாண்ட காவியம்

    பிரம்மாண்ட காவியம்

    நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஜெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். நாளை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

    English summary
    Kurukshetra is Kannada producer Naganna’s 20th film. Actor Darshan’s 50th film. Tamil release Kalaipuli S. Dhanu. This mythological film is the result of creative minds coming together.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X