பாவ்னிக்கு குறும்படம் போடும் கமல்...இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கு
சென்னை : 106 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 70 வது நாளை எட்டி உள்ளது. இந்த வாரம் முழுவதும் பாவ்னி - அபினய் காதல் விவகாரத்தில் பிக்பாஸ் வீடே பற்றி எரிந்தது. பாவ்னி மற்றும் அபினய்க்கு பிரியங்கா சப்போர்ட் செய்தார்.
சில வாரங்களுக்கு முன்பு நடந்த பாட்டில் டாஸ்கின் போது, பாவ்னியை லவ் பண்றியா என ராஜு கேட்டது தவறு என வீட்டில் உள்ள அனைவரும் பேசினர். அதற்கு ராஜு மன்னிப்பும் கேட்டார். அதற்கு பிறகும் பாவ்னி பலரிடமும் அதை பற்றி பேசி புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் ராஜுவை வறுத்தெடுத்து வந்தனர்.

தனிப்பட்ட விஷயம்
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பாவ்னி இது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லி அனைவரிடமும் கத்தினார். இதனால் கமலும் நேற்றைய எபிசோடில் அவரின் தனிப்பட்ட விஷயம் என்று சொன்ன பிறகும் எதற்காக அதில் தலையிடுகிறீர்கள். அது அநாகரிகம் மட்டுமல்ல தவறு என அனைவருக்கும் அட்வைஸ் செய்தார்.

எவிக்ஷனா, சேவா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 70 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், இமான் அண்ணாச்சி, நிரூப், அமீர் ஆகிய மூவரில் யார் வெளியேற்றப்பட போகிறார். ஒருவரின் பெயர் உள்ள கார்டு தன்னிடம் இருப்பதாக கமல் கூறினார். ஆனால் ஏற்கனவே இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என கூறப்பட்டு வந்ததால், அந்த ஒருவர் வெளியேற்றப்பட போகிறவரா அல்லது காப்பாற்றப்பட போகிறவரா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

பாவ்னியை வறுத்தெடுத்த கமல்
இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜு, அவர் மீது எனக்கும் அப்படி ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அதை எப்படி அவரிடம் சொல்வது என தெரியவில்லை என பாவ்னியே என்னிடம் சொல்லி உள்ளார் என்றார். இது பற்றி பாவ்னியிடம் கேட்டதற்கு, எனக்கும் அது போல் தோன்றியது என கூறினார். இதனால் கடுப்பான கமல், மற்றவர்கள் பேசிய போது தவறு என்று சொல்லி விட்டு, பிறகு எனக்கே அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என சொன்னால் என்ன அர்த்தம் அதற்கு. எனக்கு புரியவில்லை என பாவ்னியை வறுத்தெடுக்கிறார்.

பாவ்னிக்கு குறும்படம்
பிறகு அபினய்யிடம், பாவ்னி உங்களை பற்றி என்ன சொன்னார் என தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா என கேட்டு விட்டு, அபினய் ஆமாம் என்றதும் ஒரு குறும்படம் என்கிறார் கமல் . இதனை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். நேற்று பாவ்னிக்கு ஆதரவாக மற்றவர்களை விளாசி எடுத்த கமல், இன்று பாவ்னியை கேள்விகளால் துளைத்தெடுக்க போகிறார் என அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

இதுக்கு தானா அது
போடு போடு குறும்படம் போடு. அப்போ சம்பவம் இருக்கு. போடுங்க சார் குறும்படம். பாவ்னி மற்றும் பிரியங்கா ஃபேன்ஸ்க்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும். நேற்று ராஜுவை கமல் பேச விடாமல் செய்தது வருத்தமாக இருந்தது. இதுக்கு தான்னு இப்பத்தான் தெரியுது. இப்போ மாட்டிக்கிட்டாங்க பாவ்னி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











