எனக்குன்னு யாருமே இல்லை.. கண்ணீர் விட்டு கதறிய பாலா.. அரவணைத்து ஆறுதல் சொன்ன அன்பு ஷிவானி!

சென்னை: குறும்படம் தன்னை ரொம்பவே காயப்படுத்தியது என்று கண்ணீர் விட்டு அழுத பாலாஜி முருகதாஸுக்கு அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொன்னார் ஷிவானி.

நேற்று முன் தின புரமோவிலே காட்டிய இந்த காட்சிகள், அன்சீனில் கூட இடம்பெறவில்லையே என்று பார்த்தால், நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு வழியாக இடம்பெற்று விட்டது.

பாலாவுக்கு மட்டுமே ஏன் தான் இந்த பிக் பாஸ் எடிட்டர் இப்படி ஒரு நாளைக்கு முன்பாகவே புரமோ போட்டு புரமோட் பண்ணுகிறார் என்றே தெரியவில்லை.

குறும்படம் கேட்ட பாலா

குறும்படம் கேட்ட பாலா

ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், பாலா கலந்து கொண்ட கேப்டன் டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷ் கேப்டனாக தேர்வானார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாமல், ஆரி அவருக்கு எதிராக சதி செய்து விட்டார் என பாலாஜி முருகதாஸ் பிரச்சனை பண்ணார். மேலும், குறும்படம் போட்டுக் காட்டினா விஷயம் தெரியும் என விரப்பா பேசிய பாலாவுக்கு சனிக்கிழமை அன்று குறும்படம் போட்டுக் காட்டி கமல் வறுத்து எடுத்து விட்டார்.

அசிங்கமாயிடுச்சு குமாரு

அசிங்கமாயிடுச்சு குமாரு

ரொம்ப அசிங்கமாயிடுச்சு குமாரு என பயில்வான் பாலாவை நெட்டிசன்கள் சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு பிறகு பங்கமாக கலாய்த்துத் தள்ளினர். பாலா ரசிகர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக வெளியிட்ட குறும்பட விளக்கங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாமல் போனது தரமான சம்பவம்.

ஜோக் கிடையாது

ஜோக் கிடையாது

இந்நிலையில், ஷிவானியுடன் அமர்ந்து பேசும் பாலா, குறும்படம் ஜோக் இல்லை.. நான் தான் கேட்டேன்.. கமல் சார் என்ன ரோஸ்ட் பண்ணும் போது பார்த்துட்டுத்தான இருந்தீங்க, எனக்கு மென்டல் பிளாக் இருக்குன்னு சொன்னப்போ யாருமே எனக்காக குரல் கொடுக்கவில்லையே என அப்செட்டாகி ஆதங்கப்பட்டார்.

ஷிவானி எப்போ சமாதானம் ஆனார்

ஷிவானி எப்போ சமாதானம் ஆனார்

குண்டு ரோபோ என பாலாஜி முருகதாஸ் ஷிவானியை வச்சு கலாய்த்த போது கடுப்பான ஷிவானி பாலாவிடம், அட்லீஸ்ட் ஒரு நாளாவது பேசாமல் இருப்பார் என்று எதிர்பார்த்தால், அடுத்த நொடியே பாலா பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவர் கிட்ட இவர் பேச்சு வாங்கிக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்லி வருகிறார்.

அதிகபிரசங்கியா தெரிஞ்சிருப்பேன்

அதிகபிரசங்கியா தெரிஞ்சிருப்பேன்

பாலா விளையாடின சைடு சரியா தெரியல என, அந்த இடத்துல யாராவது எனக்காக சொல்லி சப்போர்ட் பண்ணீங்களா சனிக்கிழமை நடந்தது என்னால மறக்க முடியல, எவ்ளோ அதிகபிரசங்கியா தெரிஞ்சிருப்பேன்.. அது என் மனசை எவ்ளோ குத்திட்டு இருக்கு என ஷிவானியிடம் அழுது புலம்பி விட்டார் பாலா.

Recommended Video

மக்கள் அவரை கடவுளாய் பார்க்கின்றனர் | Dr. Parvathi Ravi chat | Rewind Raja EP-24 | Filmibeat Tamil
கண்கலங்கிய பாலா

கண்கலங்கிய பாலா

ஒரு கட்டத்துக்கு மேல், ஷிவானியிடம் பேசிக் கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ், கண் கலங்கி அழுதே விட்டார். அவரை உடனே அமைதிப்படுத்தும் விதமாக, ஷிவானி அன்புடன் அவரை அரவணைத்து ஆறுதல் சொல்லி, பழையபடி தங்களின் அன்பான ரொமான்ஸ் பயணத்தை ஆரம்பித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X