கலவையான விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் குருதி ஆட்டம்..இரண்டாம் நாள் வசூல் விவரம்!
சென்னை : அதர்வா முரளி நடித்த குருதிஆட்டம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகி உள்ள நிலையில் இப்படம் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குருதி ஆட்டம்
அதர்வா முரளி நடித்த 100 மற்றும் தள்ளிப்போகாதே படத்தின் தோல்விக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் குருதிஆட்டம் இத்திரைப்படத்தில், மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்க்கிறார் அதர்வா. கபடி விளையாட்டில் அவர்களது அணி சிறந்து விளங்கும் ஒரு அணி. அவருக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் பெண் தாதாவான ராதிகாவின் மகன் கண்ணா ரவிக்கும் இடையே கபடி விளையாட்டில் அவ்வப்போது சண்டை ஏற்படுகிறது.

அதர்வா முரளி
கண்ணா ரவியின் நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராகவன், இவரது அப்பா ராதாரவி, இவரும் மதுரையில் ஒரு தாதா தான். ஒரு தியேட்டர் தகராறில் கண்ணா ரவி நண்பர்களுக்கும், அதர்வாவுக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. அதர்வாவைப் பழி வாங்க அவரது வீட்டில் கஞ்சாவை வைத்து கைது செய்ய வைக்கிறார் பிரகாஷ். இருந்தாலும் கண்ணா ரவி தனது நண்பன் பிரகாஷுக்குத் தெரியாமல் அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார்.

ரத்தக்களறியான கதை
இதனால், கண்ணாவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் அதர்வா. ஒரு கட்டத்தில் நண்பன் கண்ணன் கொல்லப்படுகிறார். நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் அதர்வா இதுதான் படத்தின் கதை. இப்படம் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இரண்டாம் நாள் வசூல்
இந்த நிலையில், இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாகவும், இந்திய அளவில் சுமார் ₹ 0.2 கோடியை ஈட்டியது. மேலும், இரண்டாவது நாளில் 0.20 கோடி இந்திய அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து இருப்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











