ரசிகர்களிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்ட குருதி ஆட்டம் இயக்குநர்..ஏன் தெரியுமா ?
சென்னை : குருதி ஆட்டம் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குருதி ஆட்டம்
அதர்வா முரளி நடித்த 100 மற்றும் தள்ளிப்போகாதே படத்தின் தோல்விக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் குருதிஆட்டம் இத்திரைப்படத்தில், மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்க்கிறார் அதர்வா. கபடி விளையாட்டில் அவர்களது அணி சிறந்து விளங்கும் ஒரு அணி. அவருக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் பெண் தாதாவான ராதிகாவின் மகன் கண்ணா ரவிக்கும் இடையே கபடி விளையாட்டில் அவ்வப்போது சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நண்பன் கண்ணன் கொல்லப்படுகிறார். நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் அதர்வா இதுதான் படத்தின் கதை.

ரத்தக்களரி
படம் முழுக்க ரத்தமும் சண்டையும் இருந்ததால், படம் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குனரின் முதல் படமான 8 தோட்டாக்கள் படம் போலவே இப்படத்திலும் உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னித்துவிடுங்கள்
இந்நிலையில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் முகநூல் பதிவில் பட ரிலீஸின் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி. அவர்களுக்கு பதிலுக்கு சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதே போல படத்தில் இருந்த குறைகளுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், படம் சம்மந்தமான அனைத்துக் கருத்துகள் மற்றும் விமர்சனங்களைப் படித்தேன். கடினமாக உழைத்து அடுத்த படத்தை இன்னும் சிறப்பான படமாகக் கொடுக்க முயற்சி செய்வேன் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஓடிடியில்
அதர்வா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் பிரபல ஓடிடி தளமான ஆஹா தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை ஆஹா தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











