முதுகில் ரத்தம் சொட்டச் சொட்ட …அசராமல் நிற்கும் அதர்வா..குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் லுக் அவுட்!

சென்னை: பிரபல தமிழ் நடிகர் முரளியின் மகன் அதர்வா தரமான திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சாக்லேட் பாய் இமேஜிலிருந்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சன் ஹீரோவாக மாறிவரும் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 100 திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் அறிமுகத்தை கொடுத்துள்ள அதர்வா இப்பொழுது இதுவரை கண்டிராத அளவிற்கு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வர அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பார்க்கும் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

ஆக்ஷன் கதைகளம்

ஆக்ஷன் கதைகளம்

இளம் நடிகர்களில் பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகம் கொண்டுள்ள நடிகர் அதர்வா இதுவரை திகட்டாத காதல் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த நிலையில் இப்பொழுது தொடர்ந்து ஆக்ஷன் கதைகளத்தை கொண்ட திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இரண்டுமே கலந்தவாறு

இரண்டுமே கலந்தவாறு

பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட அதர்வா அதைத் தொடர்ந்து வெற்றி தோல்வி என இரண்டுமே கலந்தவாறு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவாகின.

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

வாட்டசாட்டமான உடல் அலட்டிக் கொள்ளாத நடிப்பு என ஒவ்வொரு திரைப்படத்திலும் அனைவரையும் கவர்ந்து வரும் இவர் இப்பொழுது 8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் "குருதி ஆட்டம்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் நடிகை பிரியா பவானி சங்கருடன் முதல் முறையாக ஜோடி போட்டுள்ளார். இந்நிலையில் ராதிகா சரத்குமார், ராதாரவி போன்ற மூத்த நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

குருதி ஆட்டம் திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு ஒரு பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகி வருகிறது என தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில் இப்போது அதன் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

டீசர் வரும் 11ஆம் தேதி ரிலீஸ்

டீசர் வரும் 11ஆம் தேதி ரிலீஸ்

முதுகு ஃபுல்லா ஒரே கத்திக்குத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட கொஞ்சம் கூட அசராமல் அதர்வா கம்பீரமாக நிற்கின்றவாறு வெளியாகியிருக்கும் இந்த போஸ்ட்ரை பார்த்த அனைவரும் மிரண்டு போயுள்ள நிலையில் குருதி ஆட்டம் டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாகும் எனவும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X