Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஒரு விபத்து வாழ்க்கையை மாற்றுமா?..குருதி ஆட்டம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
சென்னை : குருதி ஆட்டம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்றை பெற்றது.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 8 தோட்டாக்கள். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகணேஷ், அதர்வாவை நாயகனாக வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டாலும், பல்வேறு சிக்கலால் படத்தின் பணிகள் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. படத்தின் வெளியிட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் வெளியாவது தாமதமாகிக் கொண்டே சென்றது.
த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள குருதி ஆட்டம் படத்தில், அதர்வா ஒரு விபத்தில் சிக்குகிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளை ஏற்பட்டு அவரது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இந்த பிரச்சனைகளை அதர்வா எவ்வாறு எதிர்கொண்டார். எவ்வாறு அவரது வாழ்க்கை மாறியது என்பதை அழகான பின்னணியுடன் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ளார்.
இந்நிலையில் 'குருதி ஆட்டம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 5ந் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா நடித்த 100 திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகததால் இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரியா பவானி சங்கர் நடித்த யானை திரைப்படத்தை திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும்,கசடதபற, பத்துதல, ருத்ரன், அகிலன், பொம்மை, இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார்.
-
எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு Engagement ஆகிடுச்சு.. அரசியல் குடும்பத்து பெண் தான் மணமகளாம்!
-
கொஞ்சம் திரும்பியிருக்கலாம்.. யாஷிகா அந்த இடத்தில் குத்தியிருக்கும் அவ்ளோ பெரிய டாட்டூ.. ஹாட் பிக்!
-
சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம்... கமல், விஜயகாந்த், ஏஆர் ரஹ்மான் குடியரசு தின வாழ்த்து