குருதி ஆட்டம் படத்தின் டைட்டில் பாடல்... 19ம் தேதி ரிலீஸ்!

சென்னை : நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம்.

8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் பாடல் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அதர்வா

நடிகர் அதர்வா

நடிகர் அதர்வா 8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு தற்போது குருதி ஆட்டம் படத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த அதர்வா தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.

குருதி ஆட்டம் படம்

குருதி ஆட்டம் படம்

பன்முக கேரக்டர்களில் நடிப்பது அவருக்கு கைவந்த கலையாக உள்ள நிலையில் தற்போது குருதி ஆட்டம் படத்தில் அவர் நடித்து வருகிறார். விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ள இந்தப் படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டைட்டில் பாடல் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

ஒரு விபத்துக்கு பிறகு இரண்டு கேரக்டர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை மையமாக வைத்து த்ரில்லர் பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார். ராக்போர்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்

இடையில் படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சில பிரச்சினைகளை படக்குழு சந்தித்த நிலையில், அந்த பிரச்சினைகளை களைந்து படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

டைட்டில் ட்ராக்

டைட்டில் ட்ராக்

இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக அமையும் என்று ராக்போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் அதர்வாவிற்கு இந்தப் படம் கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X