twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனுமதி கொடுக்கவில்லை.. என் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுப்பதா..? பிரபல ஹீரோக்களுக்கு எச்சரிக்கை!

    By
    |

    கொச்சி: தனது கதையை படமாக எடுப்பதற்கு பிரபல ஹீரோக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், குருவச்சன் என்பவர்.

    Recommended Video

    Samantha Nargajuna Green India Challenge • Blissful Video

    தமிழில், அஜித்தின் தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள ஹீரோ சுரேஷ் கோபி.

    இப்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

    சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி.. நடிகர் நாஞ்சில் பிஜிலி கூட தொடர்பு இருக்கு.. வனிதா வக்கீல் அதிரடி! சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி.. நடிகர் நாஞ்சில் பிஜிலி கூட தொடர்பு இருக்கு.. வனிதா வக்கீல் அதிரடி!

    வரனே அவஷியமுண்டு

    வரனே அவஷியமுண்டு

    கடந்த ஐந்து வருடங்களாக, படங்களில் நடிக்காமல் இருந்த சுரேஷ்கோபி, டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதோடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த மலையாள படம், 'வரனே அவஷியமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ளார். இதில், பல வருடங்களுக்குப் பிறகு ஷோபனாவும் நடித்திருந்தார்.

    250 வது படம்

    250 வது படம்

    இதில் மேஜர் உன்னிகிருஷ்ணனாக வந்த சுரேஷ் கோபி கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பட ஹிட்டுக்குப் பிறகு சுரேஷ் கோபி நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர், மாத்யூஸ் தாமஸ் இயக்குகிறார். இது சுரேஷ் கோபிக்கு 250 வது படம். இது, கடுவாகுன்னேல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை மையப்படுத்தி உருவாகும் படம். சுரேஷ் கோபியின் பிறந்த நாளன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் படக்குழு வெளியிட்டது.

    கடுவாகுன்னேல் குருவச்சன்

    கடுவாகுன்னேல் குருவச்சன்

    அதில் சுரேஷ் கோபி, தாடியுடன் கொஞ்சம் வயதான லுக்கில் இருக்கிறார். இதைக் கண்ட இயக்குனரும் ஸ்கிரிப்ட் டைரட்டருமான ஜினு ஆப்ரஹாம் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், இவரும் கடுவாகுன்னேல் குருவச்சன் என்பவரின் கதையை மையமாக வைத்து, கடுவா என்ற கதை எழுதியுள்ளார். அதில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ஒரே கதையை இருவரும் இயக்குவதால் பிரச்னை எழுந்தது.

    கடுவா என்று டைட்டில்

    கடுவா என்று டைட்டில்

    இதையடுத்து ஸ்கிரிப்ட் டைரட்டர் ஜினு ஆப்ரஹாம் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம், சுரேஷ் கோபி படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதுபற்றி ஜினு ஆப்ரஹாம் கூறும்போது, 2011 ஆம் ஆண்டில் இருந்து என்னுடன் உதவி இயக்குனராக இருக்கிறார் மாத்யூஸ். என் படத்துக்கும் கடுவாகுன்னெல் கருவச்சன் என்றுதான் டைட்டில் வைத்திருந்தேன். நீளமாக இருப்பதால், சுருக்கி வைக்கச் சொன்னார் தயாரிப்பாளர் லிஸ்டன் ஸ்டீபன். அதனால் கடுவா என்று டைட்டில் வைத்தேன்.

    படத்தின் போஸ்டர்கள்

    படத்தின் போஸ்டர்கள்

    ஆனால், சுரேஷ் கோபி படத்துக்கும் அதே டைட்டிலை வைத்துள்ளனர்' என்று கூறியிருந்தார் ஜினு. சுரேஷ் கோபியும் பிருத்விராஜும் ஒரு ஜீப்பின் மேல்
    அமர்ந்திருப்பது போல போஸ்டர்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தக் கதையின் உண்மை கேரக்டரான கடுவாகுன்னேல் குருவச்சன், இவர்கள் இருவரும் தனது கதையை படமாக எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    நடவடிக்கை எடுப்பேன்

    நடவடிக்கை எடுப்பேன்

    இதுபற்றி அவர் கூறும்போது,' எனது வாழ்க்கைக் கதையை ரஞ்சித் பணிக்கர் படமாக்க இருப்பதாகச் சொன்னார். அனுமதி அளித்தேன். வேறு சிலர் என் கதையை படமாக்குவது பற்றி பேசினார்கள். ஆனால் யாரும் கதை சொல்லவில்லை. ஒரு வேளை ரஞ்சித் பணிக்கருக்கும் இந்தப் படங்களை உருவாக்குபர்களுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி தெரியாது. வேறு யாரும் என் கதையை படமாக்கினால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்' என்று தெரிவித்துள்ளார். குருவச்சன் என்கிற ஜோஸ் குருவினகுன்னேல், டாப் போலீஸ் அதிகாரிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வென்றவர் ஆவார்.

    English summary
    Shooting of the two movies of Prithviraj and Suresh Gopi based on the life of Kuruvinakunnnel Kuruvachan aka Jose Kuruvinakunnel will be in crisis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X