உதய்கிரண் தற்கொலை: குஷ்பு, பிரியாமணி,ராதிகா, பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி

By Mayura Akilan

சென்னை: தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு தமிழ் திரையுலகினர் டுவிட்டரில் அதிர்ச்சியும், அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் கடந்த சில தினங்களுக்கு தற்கொலை செய்து கொண்டார்.

உதய் கிரகிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்தார். ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் வசித்த அவர் நள்ளிரவு 12.15 மணிக்கு தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சில படங்கள் தோல்வி அடைந்தன. அத்துடன் நிதி நெருக்கடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினையும் இருந்தது என்கின்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாவதற்கு முன் கடிதம் ஏதேனும் எழுதி வைத்து இருந்தாரா என்று தேடுகின்றனர். உதய் கிரணுக்கு வந்த போன் நம்பர்களையும் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். கடைசியாக உதய் கிரண் சென்னையில் உள்ள அவரது நண்பர் பூபாலுக்கு போன் செய்துள்ளார். பிரேத பரிசோதனையில் உதய்கிரண் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரே துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

குஷ்பு வருத்தம்

குஷ்பு வருத்தம்

நடிகை குஷ்பு கூறும்போது, ‘‘உதய்கிரண் இளம் நடிகர். திறமையானவர். அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியானேன்'' என்றார்.

பிரியாமணி அதிர்ச்சி

பிரியாமணி அதிர்ச்சி

நடிகை பிரியாமணி கூறும்போது, ‘‘உதய் கிரண் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டுக் கொண்டேதான் காலையில் எழுந்தேன். எனக்கு தெரிந்த நண்பர்களில் அவர் இனிமையானவர். அவரது மரணம் என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது'' என்றார்.

விமலாராமன் துயரம்

விமலாராமன் துயரம்

நடிகை விமலாராமன் கூறும்போது, ‘‘என் திரையுலக வாழ்க்கையில் உதய்கிரண்தான் எனது முதல் ஜோடி. ரொம்ப இனிமையானவர். அவரை இழந்துவிட்டோம்'' என்றார்.

ராதிகா அதிர்ச்சி

ராதிகா அதிர்ச்சி

நடிகை ராதிகா சரத்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில், ஓ மை காட். இந்த தகவலை என்னால் நம்ப முடியவில்லை. உதய்கிரணின் மரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

இளம் நடிகர் உதயகிரணின் தற்கொலை என்னை தொந்தரவு செய்கிறது. இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன கவலை?

இதேபோல உதய்கிரண் தற்கொலைக்கு சந்தீப்கிஷன், மதுரா ஸ்ரீதர் போன்றோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X