" தன் நண்பரை பற்றி புகழாரம் சூட்டும் நடிகை குஷ்பு."
சென்னை: குஷ்பூ என்ற பெயரை சொன்னாலே நம்ம தமிழ்நாட்டுல தெரியாதவங்க யாருமே இல்லைங்க. அந்தளவுக்கு ஒரு பிரபலமான நடிகை. வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்ற சொல்லுக்கு இணங்க பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் வந்து முப்பது ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை குஷ்பூ.
குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்களும் இருக்காங்க. குஷ்பூ இட்லியும் நம்ம தமிழ்நாட்டில பேமஸான உணவு.

பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார் நடிகை குஷ்பு. அவருடைய துடிப்பான பேச்சும் துள்ளலான ஆட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சக கலைஞர்களோடு சகஜமாக பேசுவதிலும் பழகுவதிலும் அவரை மிஞ்ச ஆளே இல்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சமயத்தில் இயக்குனர் சுந்தர்சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இப்பொழுது சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு முன்னணி அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இப்படிப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட குஷ்பு தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகரும் நண்பருமான கமல்ஹாசனைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார்.

இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் மைக்கேல் மதன காமராஜன் ,சிங்காரவேலன் மற்றும் பல. இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்ததாகவும் சினிமாவைப் பற்றி தான் அதிகம் தெரிந்து கொள்ள உறுதுணையாய் இருந்தவர் கமல்ஹாசன் என்று கூறினார்.
கமல்ஹாசன் அவர்கள் என்னுடைய கஷ்டமான சூழ்நிலைகளிலும் ஒரு நல்ல நண்பராக இருந்திருக்கிறார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சினிமா துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு அவர் ஒரு என்சைக்ளோபீடியா என்று தன் நண்பரை பற்றி பெருமையாக கூறுகிறார் நடிகை குஷ்பு.
மீண்டும் இந்த அழகான ஜோடியை வெள்ளித் திரையில் பார்க்க முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலக நாயகனின் பிறந்த நாளான இன்று குஷ்பூ அவரது நண்பர் கமலை பற்றி பகிர்ந்த தகவல் மிகவும் ஸ்பெஷல்.


Click it and Unblock the Notifications











