அம்மா வயது நடிகையை டீலில் விட்டுட்டாரா போனி கபூர் வாரிசு.. விவாகரத்து நடிகையுடன் டேட்டிங்கா?
மும்பை: பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் சீனியர் குத்தாட்ட நடிகை மலைகா அரோராவை காதலித்து வந்த நிலையில், சமீப காலமாக இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாகவும், இன்னொரு இளம் நடிகையுடன் அர்ஜுன் கபூர் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் பற்றிக் கொண்டு எரிகிறது.
அதற்கு காரணம் கரண் ஜோஹரின் பார்ட்டிக்கு சமீபத்தில் அர்ஜுன் கபூர் மலைகா அரோராவுடன் செல்லாமல் அதற்கு பதிலாக நடிகை குஷா கபிலாவுடன் ஜோடி போட்டு சென்றது தான் என்கின்றனர்.

இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் விவாகரத்து ஆன நடிகை குஷா கபிலாவே மனம் திறந்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா பிரேக்கப்பா?: 50 வயதை நெருங்கிய நடிகை மலைகா அரோராவை 30 பிளஸ் வயது நடிகர் அர்ஜுன் கபூர் காதலித்து வருவது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

உயிரே படத்தில் "தக்க தையா தையா" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மலைகா அரோரா இந்த வயதிலும் யோகா எல்லாம் செய்து கட்டுக்கோப்பாக உள்ளார். ஏற்கனவே முதல் திருமணம் முடிந்து 20 வயதுக்கு மேல் மகன் உள்ள நிலையில், அர்ஜுன் கபூரை காதலித்து வரும் மலைகா சமீபத்தில் அவரை பிரேக்கப் செய்து விட்டதாக பெரும் பரபரப்பு கிளம்பி உள்ளது.

விவாகரத்து நடிகையுடன் பார்ட்டியில் அர்ஜுன் கபூர்: போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் சமீபத்தில் கரண் ஜோஹர் நடத்திய இரவு பார்ட்டிக்கு மலைகா அரோராவை விட்டு விட்டு மஸாபா மஸாபா 2 பட நடிகை குஷா கபிலாவுடன் ஜோடி போட்டு வந்தது தான் இப்படியொரு சர்ச்சை வெடிக்கவே காரணம் என்கின்றனர்.

நடிகை விளக்கம்: இந்நிலையில், தற்போது காட்டுத்தீ போல பரவிய வதந்திக்கு அந்த நடிகையே விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது சோஷியல் மீடியா பக்கத்தில், "ஒவ்வொரு முறையும் என்னை பற்றிய தவறான பேச்சுக்கள் அடிபடும் போதெல்லாம்.. இறைவனிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.. நல்லவேளை எங்கம்மா சோஷியல் மீடியாவில் இல்லை" எனக்கூறி தனக்கும் அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் என பரவியது வதந்தி மட்டும் தான் என்பதை உணர்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











