இடிபடும் சந்திரமுகி பங்களா சுமார் 10,000 சினிமா படப்பிடிப்புகளை கண்ட சந்திரமுகி பங்களா, அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுவதற்காகஇடிக்கப்படுகிறது.சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் 20 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ள குசால்தாஸ் கார்டன்பாரம்பரியமும், கம்பீரமும் மிகுந்த ஒரு பழைய பங்களாவாகும். 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பங்களா, சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்று வந்தது.இதுவரை 10,000 படப்பிடிப்புகள் கண்ட பங்களாவாகும் இது.சரத்குமார் நடித்த நாட்டாமை, சூர்யவம்சம் ஆகிய படங்களின் படப்பிடிப்பும் இங்கு நடைபெற்று வெற்றி பெற்றதால், ஒரேநேரத்தில் 3 படப்பிடிப்பு நடக்கும் அளவிற்கு குசால்தாஸ் பங்களா பிரபலமடைந்தது.அதே போல் சமீபத்தில் ரஜினி நடித்து சக்கைபோடு போட்ட சந்திரமுகி படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த பங்களாவில்தான் படம்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி ஆவி வசிக்கும் பங்களாவாக இந்த பங்களா காட்டப்பட்டது. சந்திமுகி படத்திற்கு பிறகு இந்த பங்களாவை சந்திரமுகி பங்களா என்று திரையுலகினர் அழைக்க ஆரம்பித்தனர்.இத்தனை பிரசித்து பெற்ற பங்களா, பல மாடி அடுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக தற்போது இடிக்கப்படுகிறது

By Staff

சுமார் 10,000 சினிமா படப்பிடிப்புகளை கண்ட சந்திரமுகி பங்களா, அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுவதற்காகஇடிக்கப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் 20 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ள குசால்தாஸ் கார்டன்பாரம்பரியமும், கம்பீரமும் மிகுந்த ஒரு பழைய பங்களாவாகும்.

100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பங்களா, சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்று வந்தது.இதுவரை 10,000 படப்பிடிப்புகள் கண்ட பங்களாவாகும் இது.


சரத்குமார் நடித்த நாட்டாமை, சூர்யவம்சம் ஆகிய படங்களின் படப்பிடிப்பும் இங்கு நடைபெற்று வெற்றி பெற்றதால், ஒரேநேரத்தில் 3 படப்பிடிப்பு நடக்கும் அளவிற்கு குசால்தாஸ் பங்களா பிரபலமடைந்தது.

அதே போல் சமீபத்தில் ரஜினி நடித்து சக்கைபோடு போட்ட சந்திரமுகி படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த பங்களாவில்தான் படம்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி ஆவி வசிக்கும் பங்களாவாக இந்த பங்களா காட்டப்பட்டது.

சந்திமுகி படத்திற்கு பிறகு இந்த பங்களாவை சந்திரமுகி பங்களா என்று திரையுலகினர் அழைக்க ஆரம்பித்தனர்.

இத்தனை பிரசித்து பெற்ற பங்களா, பல மாடி அடுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக தற்போது இடிக்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X